Featured post

A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!

 *A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!* The much-awaited romantic comedy Aaromaley is gearing up to hit the...

Thursday, 3 December 2020

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா !

 கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா ! 















மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசாமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் முழுக்கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவா  அமைக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும்படியும் கதை அமைக்கப்பட்டுள்ளது. மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு கூட்டணியுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக இருக்கும். இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் C இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி  பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment