Featured post

*A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus,

 *A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus, the Conv...

Friday, 4 December 2020

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம்

 இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம்

 “சார்பட்டா பரம்பரை” 

 வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.








 இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.


கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

பாடல்கள் கபிலன், அறிவு .


முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.


படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.


படப்படிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் First Look வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் படம் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன...

No comments:

Post a Comment