Featured post

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'நரிவேட்டை

 *தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'நரிவேட்டை'!* டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'நரிவேட்டை' திரைப்பட...

Friday, 4 December 2020

வேலம்மாள் நெக்ஸஸ் வலையொளியில்ஆரோக்கிய வாழ்வு நேரலை நிகழ்வு

வேலம்மாள் நெக்ஸஸ் வலையொளியில்ஆரோக்கிய
வாழ்வு நேரலை  நிகழ்வு


30.11.2020 (திங்கள்) அன்று வேலம்மாள் யூடியூப் சேனலில் மாலை 6:00 மணியளவில் ஆரோக்கிய சித்தா மருத்துவமனையின் நிறுவனரும்
மருத்துவ நிபுணருமாகிய   டாக்டர் சிவராமன்  அவர்கள் கலந்து கொண்டு  நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக அமையும் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களை  வழங்கினார்.


பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்களை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். மேலும் தற்கால உணவுப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விதம் பற்றி எடுத்துக்கூறியதுடன் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம், தற்காலச் சூழலில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ,காற்று மாசுபாடு நீரிழிவு நோய்க்கு காரணமாக அமையும் விதம் என்று பல்வேறு புதிய செய்திகளைப் பற்றியும் விவாதித்தார்.


இந்நிகழ்வு  அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது.


பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பங்களிப்பு இந்நிகழ்வின் வெற்றியைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

No comments:

Post a Comment