Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Tuesday, 8 December 2020

ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே

 “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே  காமெடியில் கலக்கும் - நடிகர் விவேக் பிரசன்னா ! 







ரசிகர்களுக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. Hotstar Specials மற்றும்  Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்” கலகலப்புக்கு பஞ்சமில்லா இந்த காமெடித் தொடர்   டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம்  நட்சத்திரமான   ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை தந்து, ரசிகர் மனங்களை கொள்ளையடித்துள்ள நடிகர் விவேக் பிரசன்னா “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலும் அசத்தியுள்ளார் என்பது இதுவரை வெளியான விஷுவல் புரொமோக்களிலேயே உறுதியாகியுள்ளது. 



“ட்ரிப்ள்ஸ்” தொடர் குறித்து நடிகர் விவேக் பிரசன்னா கூறியதாவது... 


Hotstar Specials  “ட்ரிப்ள்ஸ்” தொடரில் எனது கதாப்பத்திரம்  மற்றும் நடிப்பை பற்றி கூறுவதை விட, ஒரு ரசிகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அற்புதமான காமெடியை இத்தொடர் மூலம் வயிறு குலுங்க சிரித்து ரசித்தேன் என்பதை கூறுவதே முக்கியம். இயக்குநர் சாருகேஷ் மற்றும் எழுத்தாளர் பாலாஜி ஜெயராமன் இருவரும் அற்புதமான பணியினை வழங்கியுள்ளனர். இத்தொடரின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் காமெடியில் அசத்தும்படி இருக்கும். இது ஒரு சிட்காம் காமெடி போன்றது தமிழில் நகைச்சுவை கிரேஸிமோகன் செய்த நகைச்சுவையை ஞாபகப்படுத்தும்படி இருக்கும். ஏற்கனவே எங்கள் குழுவினர்  சார்பில் தமிழில் நகைச்சுவை தளத்தில் பல சாதனைகள் புரிந்த கிரேஸிமோகன் அவர்களுக்கு இத்தொடரை அர்ப்பணித்துள்ளோம் என்பது குறிப்பிடதக்கது.


விவேக் பிரசன்னா மேலும் கூறும்போது 

இப்போது அனைவரும் “ட்ரிப்ள்ஸ்” தொடர் எந்தமாதிரி இருக்கும் என்பதை யூகித்திருப்பார்கள். ஆனால் உண்மையில் உங்கள் அபிமானங்கள் அனைத்தையும் உடைத்து குடும்பங்களோடு கொண்டாடும் மிகச்சிறந்த காமெடி கலாட்டாவாக  டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் காணப்போகிறீர்கள். Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை இயக்குநர் சாருகேஷ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இத்தொடருக்கு இசையமைத்துள்ளார். மிக சமீபத்தில் அவரது இசையில் வெளியான “நீ என் கண்ணாடி” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment