Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Thursday, 3 December 2020

ஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட் லுக்

 ஜான்சன் - சந்தானம் கூட்டணியின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது 

ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் - ஜான்சன் கூட்டணி.

'ஏ1' படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் - ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக அனைவரும் லாபம் ஈட்டிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது. 

காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'பாரீஸ் ஜெயராஜ்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.



இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். 'ஏ1' படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார்.

எடிட்டராக பிரகாஷ் மாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷும் பணியாற்றியுள்ளனர். அனைத்து பாடல்களுக்கும் சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். டீஸர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கொரோனா அச்சுறுத்தலால் இறுக்கமான மனங்களைச் சிரிப்பு மழையில் நனைய வைத்து இதமாக்க ஜனவரியில் வெளியாகவுள்ளது 'பாரீஸ் ஜெயராஜ்'.

No comments:

Post a Comment