Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Wednesday, 9 December 2020

Hotstar Specials “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும்

 Hotstar Specials “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும் 

வாணி போஜன் ! 

தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த 

Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. 

மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். 






தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங்கள் பகிர்ந்துகொண்டதாவது... 

  “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் சாருகேஷ் அவர்களின் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சிதமாக இருக்க வேண்டுமென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்படி கேட்டார். இப்போது திரையில் பார்க்கும்போது அது வெகு அழகாக வந்துள்ளது. “நீ என் கண்ணாடி” பாடலுக்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடர் மிக மகிழ்ச்சியான அனுபவமாகவும்,  நிறைய கற்றுகொள்ள உதவியாகவும் இருந்தது  . நடிகர் ஜெய் சம்பத் மிக எளிமையானவராகவும், நட்புடன் பழகக்கூடியவராகவும் இருந்தார். படக்குழுவில் அனைவருடனும் சரிசமமாக  பழகி இயல்பாக வைத்துக்கொண்டார். 


“ட்ரிப்ள்ஸ்” இணையதொடர் காமெடியில் கலக்கும் அதே நேரம் அழகான காதலும், உணர்வுகளும் கொண்டிருக்கும். இத்தொடர் பங்குகொண்ட அனைத்து நடிகர்கள் அனைவரின் திறமையில்  சிறந்ததை முழுமையாக வெளிக்கொண்டுவந்துள்ளது. Disney Hotstar VIP மற்றும் கார்த்திக் சுப்புராஜ், ஜெய் போன்ற மிகப்பெரும் பெயர்கள் சம்பந்தபட்டுள்ள இந்த இணையதொடரில் நடிகராக பங்குகொண்டதில் நான் பெருமை கொள்கிறேன்.

வயிறு குலுங்க வைக்கும், அட்டகாச காமெடியை  Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் கண்டுகளியுங்கள்.

No comments:

Post a Comment