Featured post

Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu

 Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu after watching Animal It is known that Bobby...

Tuesday, 14 December 2021

ஒரு மில்லியனை கடந்த 'மாயோன்' பட பாடல்*

 *ஒரு மில்லியனை கடந்த 'மாயோன்' பட பாடல்*


இசை ரசிகர்களை வியக்க வைக்கும் 'மாயோன்' பட பாடல்


இசை விமர்சகர்களின் பாராட்டை குவித்து வரும் 'மாயோன்' பட பாடல்


மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் சிலம்பரசன் வெளியிட்ட 'மாயோன்' பட பாடல்




இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த 'மாயோன்' பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.


'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து, இணையத்தையும், இசை உலகையும் அதிரச் செய்திருக்கிறது.


கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக ஒப்பில்லா புகழுடன் வலம் வரும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இசை ஞானி இளையராஜாவின் இசையில் 'மாயோனே மணிவண்ணா..' எனத்தொடங்கும் 'மாயோன்' பட பாடலுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள்.


அண்மையில் வெளியான இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், இசைஞானி இளையராஜாவின் குரலில் இதற்கு முன்னர் வெளியான 'ஜனனி ஜனனி..' என தொடங்கும் பாடலுக்கு பிறகு, இசைஞானி எழுதி இசை அமைத்த 'மாயோனே மணிவண்ணா..' என்ற பாடலைப் போல் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது என பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.


'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் பாடலில் இசைஞானியின் இனிய மெட்டும், பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


இசை ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், இசை விமர்சகர்கள், பாமரர்கள், இணைய தலைமுறையினர், இளைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று 'மாயோனே மணிவண்ணா..' என்ற பாடல் இணையத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.


டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் 'மாயோன்' படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 


சிம்பொனி இசைத்த இசைமேதை இளையராஜாவின் மயக்கும் மெட்டில் உருவாகி, காலை நேர பூபாளத் தென்றலாக 'மாயோனே மணிவண்ணா..' என்ற பாடல், இனி தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும். வரவிருக்கும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலிக்கும் பக்தி பாடலின் பட்டியலில் ரஞ்சனி,  காயத்ரியின் இனிய குரலில் ஒலிக்கும் 'மாயோன்' பட பாடலும் இணையும் என்பது உறுதி.




இதனிடையே ரசிகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் கீதா ஜெயந்தி தின வாழ்த்துக்களையும் தெரிவிக்கும், ‘மாயோன்’ படக்குழுவினர், இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் இசைஞானியின் இந்த பாடலை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது. தெலுங்கில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கரபாட்லா எழுத, பின்னணி பாடகிகளான சைந்தவி மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அங்கும் இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment