Featured post

என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி

 *'என் காதலே' சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்- இயக்குநர் ஜெயலட்சுமி* *Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி ...

Friday, 17 December 2021

பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் நடிக்கும்

 *பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம்*


*S.A.S. புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க பிக்பாஸ் ஆரி அர்ஜுனனின் அடுத்த படம்*


*மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம்*


S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.


இப்படத்திற்கு ஒளிப்பதிவு - K.G.ரத்தீஷ், இசை -ஸ்ரீ சாய்தேவ், கலை - S.J.ராம், சண்டை - S.R.ஹரி முருகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுடன் முன்னணி நடிகர், நடிகைகள் இணைய இருக்கிறார்கள். அவர்களை பற்றிய விவரங்களை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment