Featured post

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

 சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!  'தி வெர்டிக்ட்' திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா! என் இளமையின் ரகசியம் எ...

Thursday, 2 December 2021

" வரிசி " படத்தின் டிரெய்லர்

 " வரிசி "


" வரிசி " படத்தின் டிரெய்லர் வெளியீடு.

ரெட்பிளிக்ஸ் பிலிம் பேக்டரி நிறுவனமும் முயற்சி படைப்பகம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ள " வரிசி " படத்தின் டிரெய்லரை கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் விஜயமுரளி, சௌந்தர், திரைப்பட தயாரிப்பாளர்கள் எம்.முத்துராமன், ஞானவேல் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

பாடல் மற்றும் படத்தின் முன்னோட்டத்தை பார்த்த இந்த ஐவரும் பாராட்டி பேசி வாழ்த்தினார்கள். இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகர் படத்தின் நாயகனும் இயக்குனருமான கார்த்திக்தாஸ், இசையமைப்பாளர் நந்தா. பாடலாசிரியர் உமாரமணன், கதாநாயகி சப்னா தாஸ், ஒளிப்பதிவாளர் மிதுன் மோகன், நடிகர்கள் ஆவிஸ் மனோஜ், கணேஷ், பாலாஜிராஜசேகர்,
ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

கிளாமர் சத்யா அனைவரையும் வரவேற்றார்.
காயத்ரி தொகுத்து வழங்கினார்.





























No comments:

Post a Comment