Featured post

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. ...

Friday 17 December 2021

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் ருத்ரா - சுபிக்ஷா நடித்துள்ள

 ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் ருத்ரா - சுபிக்ஷா நடித்துள்ள " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை "


நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை "  என்று பெயர் வைத்துள்ளனர்.


சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை கேட்கும் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை தரும் நாயாகியாக சுபிக்ஷ நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்  









ஒளிப்பதிவு  -  பிஜு விஸ்வநாத்

இசை - ராஜேஷ் அப்புகுட்டன் - ருத்ரா

பாடல்கள் - கட்டளை ஜெயா

எடிட்டிங். - சுதாகர்

கலை இயக்கம் - மகேஷ் ஸ்ரீதர்

நடனம்  - ராபர்ட், ரேகா

ஸ்டண்ட்  - விஜய்

வசனம் மற்றும் இணை இயக்கம் - L.கணபதி

மக்கள் தொடர்பு - மணவை புவன்

தயாரிப்பு மேற்பார்வை - அன்பு

தயாரிப்பு  -  நுபாயஸ் ரகுமான்

THREE FACE Creations Release

கதை, திரைக்கதை, இயக்கம் - மகேஷ் பத்மநாபன்


படம் பற்றி நாயகன் ருத்ரா கூறியதாவது...


நாயகன் கதிர் (ருத்ரா ) ஆடியோ கிராபியில் கோல்ட் மெடலிஸ்ட், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஸ்ருதி ( சுபிக்ஷா ) ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக வனப்பகுதிக்கு வர அவளுக்கு உதவி செய்ய, கதிர் நியமிக்கப்படுகிறான். ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில்  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

அவள் அவனது திறமையை அங்கீகரிக்க மறுக்கிறாள்.  ஆனால் அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளித்து தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக்கொடுக்கிறான். அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை அவளுக்கு பெற்றுத்தர அதற்கு தகுதியானவன் கதிர் என்பதை உணர்கிறாள். தொடர்ந்து, BBC க்காக ஆடியோ டாக்குமெண்ட்ரி செய்யவரும் டேவிட் ஸ்ருதியை நாட அவள் தன் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதிரை சாமர்த்தியமாக பேசி உதவிக்கு அழைக்கிறாள். அவளின் ஆசை வார்த்தைகளை உண்மை என்று நம்பும் கதிர் அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். ஸ்ருதி ஒரு சந்தர்ப்பவாதி, கதிரை வைத்து தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்த டேவிட் கதிரை தனியாக சந்தித்து அவளைப்பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து இனியும் அவளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறார். ஸ்ருதியின் சுய ரூபம் என்ன, கதிரின் காதல் என்னவாயிற்று என்பதற்கு பதில் திரையில் கிடைக்கும் என்கிறார் நாயகன் ருத்ரா.


கதையின் நாயகன் அறிமுகமாகும் காட்சியில் தேனீக்களின் ஓசையை பதிவிடுவதற்காக சுமார் 200 உயர  மரத்தில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் எடுத்துக்கொள்ளாமல், டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து  நடித்துள்ளார்..  மயிர் கூச்செரியும் அச்சம்பவம் திரையில் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும்.

படத்தின் ஒரு முக்கியமான காட்சி அருவியின் அருகே படமாக்கப்பட்டது.. கதானாயகன் ருத்ராவுடன் நாயகி சுபிக்‌ஷா பங்குகொள்ளும் காட்சி, அருவியின் சத்தத்தை பதிவு செய்ய நீர் பாய்ந்தோடும் பாறைகளில் ரிக்கார்டிங் சாதனங்களுடன் செல்லும் போது வழுக்கி விழுந்து கதானாயகனுக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அதனால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் காட்சி செவ்வனே நிறைவேற  தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தந்த ருத்ராவின் ஈடுபாட்டை  பாராட்டியே ஆக வேண்டும்.  

         

வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியினுள் படப்பிடிப்பு குழுவினர் ஜிம்மி ஜிப் போன்ற மிக கனம் வாய்ந்த உபகரணங்களை தோளில் சுமந்து காடு மலை மேடுகள் கடந்து விலங்கினங்கள், ஊர்வன வற்றின்  இடையூரையும் பொருட்படுத்தாது தங்களின் முழு ஒத்துழைப்பை குடுத்தது படத்தின் மேலும் கதையின் மேலும் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டை தெளிவாக காட்டுகிறது.


வருகின்ற 24 ம் தேதி THREE FACE Creations  பட நிறுவனம்  இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.


" சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை அள்ளியிருக்கிறது.


1.Goa international Film competition


Best South Indian movie

Best Actor


2. 7 Colours International film Festival


Best Screen Play

Best Actor


3.  Silver Screen International Festival


Best Actor

Best movie in other language.

No comments:

Post a Comment