Featured post

Vaa Vaathiyar Movie Review

Vaa Vaathiyaar Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumar...

Sunday, 4 December 2022

முதல் சென்னை ஓபன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப்

 *முதல் சென்னை ஓபன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப்*


*நவ-21 முதல் டிச-03, 2022*

 

*லெட்ஸ் பவுல், துரைப்பாக்கம்*

 

*சென்னை* 


*முதலாவது சென்னை ஓபன் போட்டியில் டைட்டில் வென்ற ஆகாஷ் அசோக் குமார்*


சென்னையில் டிச-3, 2022 அன்று துரைப்பாக்கம் லெட்ஸ் பவுலில் நடைபெற்ற முதலாவது சென்னை ஓப்பன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆகாஷ் அசோக் குமார் என்பவர் தனிநபர் ஓபன் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்


முன்னதாக இதே நாளில் மாஸ்டர் சுற்றில் 8 விளையாட்டுக்களில் இருந்து ஒட்டுமொத்த பின்பால்கள் என்கிற அடிப்படையில் முதல் நான்கு வீரர்கள் ஸ்டெப்லேடர் ரவுண்டுக்கு முன்னேறினர்.


கர்நாடகாவைச் சேர்ந்த ஆகாஷ் அசோக் குமார், டெல்லியைச் சேர்ந்த துருவ் சர்தா, தமிழகத்தைச் சேர்ந்த ஷபீர் தன்கோட், மற்றும் கர்நாடகாவின் பிரத்யேக் சத்யா ஆகியோர் முறையே முதல் 4 இடங்களை பிடித்தனர்.





சேலஞ்ச் தி லீடர் வடிவத்தில் நடைபெற்ற ஓபன் பிரிவின் ஸ்டெப்லேடர் சுற்றின் முதலாவது போட்டியில், மூன்றாவது நிலையில் இருந்த வீரர் ஷபீர் தன்கோட், நான்காம் நிலை வீரரான ப்ரத்யேக் சத்யாவை (193–169 என்கிற பின்களின் அடிப்படையில்)  வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 


இரண்டாவது ஸ்டெப்லேடர் சுற்று ஆட்டத்தில், இரண்டாம் நிலை வீரரான துருவ் சர்தா, ஷபீருக்கு எதிராக (235 – 213 என்கிற பின்களின் அடிப்படையில்) வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


முதலிடத்தில் இருந்த ஆகாஷ் அசோக் குமார், 2-வது இடத்தில் இருந்த துருவ் சர்தாவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு (289 222 என்கிற பின்கள் கணக்கில்) 67 பின்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஓபன் பிரிவில் பட்டத்தையும் வென்றார்


இரட்டையர் ஓபன் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த இரட்டையர்களான அசோக்குமார் மற்றும் கிசன் R ஆகியோர், கர்நாடகாவைச் சேர்ந்த பர்வேஸ் அகமத் மற்றும் சல்மான் கான் என்கிற இரட்டையர்களை (871-855 என்கிற பின்கள் கணக்கில்) 16 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டைட்டிலையும் வென்றனர். உமேஷ் குமார் மற்றும் அக்ரமுல்லா பெய்க், பார்த்திபன் J மற்றும் தீபக் கோத்தாரி சபீர் ஆகியோர் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்தனர். 


மாஸ்டர் சுற்றுக்கு தகுதி பெற்ற 12 வீரர்களும், தரம் பிரிக்கும் பிரிவில் 8 போட்டிகள் அடங்கிய தொகுப்பில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மோதினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ரமுல்லா பெய்க் 1654 பின்களுடன் 206.75 என்கிற சராசரியை பெற்று, 1637 பின்கள் மற்றும் 204.63 என்கிற சராசரியை பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த பார்த்திபனை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு தள்ளினார். கர்நாடகாவைச் சேர்ந்த சல்மான் கான் 1582 பின்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த்பாபு 1559 பின்களும் பெற்று முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்தனர். 


ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி டீன் திரு.பிலிப் மற்றும் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.


10 மாநிலங்களில் இருந்து 75 பந்துவீச்சாளர்கள் இந்த ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.


*சிறப்பு பரிசுகள்* 


ஓபன் பிரிவில் அதிகபட்சம் 3 விளையாட்டுகளில் ஸ்கோர் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த NT கணேஷ், 


தர வரிசை பிரிவில் அதிகபட்சம் 3 விளையாட்டுக்களில் ஸ்கோர் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த சுசில் ஆடம்


*வாழ்த்துக்களுடன்*


*ஹபிபுர் ரஹ்மான்*

*போட்டி ஒருங்கிணைப்பாளர்*

*98840 27207*

No comments:

Post a Comment