Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Saturday, 13 May 2023

தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை

 தமிழகப் பாடநூல்களில் திருவருட்பா : அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை மஹாவிஷ்ணு வேண்டுகோள்!


தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் சமூகத் தொண்டு நிறுவனத்தை  குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் நடத்தி வருகிறார்.







தனது இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஏராளமான அறப்பணிகளைச் செய்து வருகிறார். தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை எளிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி, அரசுப் பள்ளி கட்டடங்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் போன்ற சேவைகளை இந்தப் பரம்பொருள் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. 

அதனைத் தொடர்ந்து குருஜி மஹாவிஷ்ணு, பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக்கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் அவர்கள் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு பாடநூல்கழகத் தலைவர் மாண்புமிகு திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்து மனுகொடுத்து இது தொடர்பாகப் பேசி, கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி்.கே.சேகர்பாபு அவர்களையும், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மனுகொடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமாறு கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment