Featured post

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"* Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been ...

Wednesday, 3 May 2023

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு

 தேதி: 03.05.2023

இரங்கல்  செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா அவர்கள் தனது 69-ம் வயதில் உடல்நல குறைவால் காலமானார். 



மிகவும் எளிமையான, பண்பான, பாசமிக்க மனிதர். தென்னிந்திய நடிகர் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் சுகதுக்கங்களில் முனைப்புடன் பங்கெடுத்தவர். சங்க பணிகளின்  வளர்ச்சிக்கு அயராமல் எப்பொழுதும் இளமையாக சுறுசுறுப்புடன உழைத்து உறுதுணையாக இருந்தவர். சங்க கட்டிடம் கட்டி முடிக்க ஒரு இலட்சியத்துடன் தன்னாலான செயல்பாடுகளை செய்ய ஆர்வம் மிக்கவராகவும் இருந்தார்.  

திரையுலகினருக்கு அவருடைய இழப்பு ஒரு மாபெரும் ஈடு இணையில்லாத இழப்பாகும். அவருக்கு நிகர் அவரே. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரையுலகினருக்கு, ரசிக பெருமக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.


 

(M.நாசர்),

தலைவர்,

No comments:

Post a Comment