Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Thursday, 11 May 2023

"சரக்கு" அப்டேட்ஸ்!

 மன்சூர் அலிகானின்

"சரக்கு" அப்டேட்ஸ்!


இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மன்சூர் அலிகானின் "சரக்கு"!


இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காரணம், "சரக்கு" உள்ள நடிகர்கள் அனைவரையும் இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க வைத்துக் கொண்டு உள்ளார்!


பாக்யராஜ், மன்சூர் அலிகான், வலினா பிரின்ஸ், யோகி பாபு, நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், சேஷு, கோதண்டம், கிங்ஸ்லி, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்!


இவர்களுடன் சில அரசியல் கட்சி தலைவர்களும் நடிக்கிறார்கள்.


ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் - மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், எடிட்டிங் எஸ்.தேவராஜ் ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!


@GovindarajPro

No comments:

Post a Comment