Featured post

Seven Screen Studios Producer S.S. Lalit Kumar's upcoming project, tentatively titled "Production No. 13"

 Seven Screen Studios Producer S.S. Lalit Kumar's upcoming project, tentatively titled "Production No. 13" and featuring L.K. ...

Thursday, 11 May 2023

சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப்

 சென்னை அமீர் மஹாலில் சோசியல் எட்ஜ் இணைய தளம், நவாப்சாதா முகமது ஆசிப் அலியுடன் இணைந்து ஐகிளாம் எனும் இன்ஃப்ளூன்சர் மார்க்கெட்டிங் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தனர்.  இந்த நிகழ்ச்சியில் சோசியல் எட்ஜ் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா, ஐ கிளாம் நிறுவனர் தேவயானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


புதுமையான பிராண்டிங் தளமான சோசியல் எட்ஜ் தமிழ்நாட்டில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து இன்ஃப்ளுன்சர் மார்கெட்டிங்கில் ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சொந்த கலாச்சாரத்தையும் திறமைகளையும் உலகளாவிய தரத்தை நோக்கி மேம்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது. 



சோசியல் எட்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விநாயக் குப்தா,மரைன் மற்றும் பலவேறு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து, தேவைகளைப் புரிந்துகொண்டு திடமான பிராண்டிங்  பயணத்தைத் தொடங்குவது தனது ஆர்வம் எனவும் அதனைஉருவாக்க ஆடை வடிவமைப்பாளர்கள் முதல் நடன இயக்குனர்கள் வரை தங்களுடன் இணைய தயாராக இருப்பவர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.  அதற்கு சரியான அடித்தளத்தை அமைப்பது மிகவும் முக்கியம் என்பதால் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் திறமை  கொண்ட சென்னையில் சோசியல் எட்ஜின் ஐ கிளாம் பள்ளியைத் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.  அழகுப் போட்டிகள், மாடலிங், நடிப்பு, இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தளங்களில்   மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


தங்கள் பள்ளி மாணவர்கள் அழகாகவும், சுகாதாரமாகவும், போட்டி மற்றும் வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாக ஐ கிளாம் நிறுவனர் தேவயானி குறிப்பிட்டார். 

 ஐ கிளாம் பள்ளியின் முதல் பயிற்சி பட்டறை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment