Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Thursday, 11 May 2023

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்





*எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை மேம்படுத்தும் ஜூபாப் செயலியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் உபயோகப்படுத்தலாம்* 


'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். 


தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். 


இந்த செயலியின் செயல்முறை விளக்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நாளை (மே 12) நடைபெற உள்ளது. 


ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப், "உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்," என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நடனத்தை தொழிலாக மேற்கொள்ள விரும்புவோருக்கு என மூன்று விதமாக இந்த செயலி பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொண்டு அவர்களுக்கு உரிய நடன பயிற்சிகளை மிகவும் எளிதாக மேற்கொள்ளலாம்," என்றார். 


பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிய ஷெரீஃப், "சுமார் 450 பள்ளிகளில் இந்த செயலியை ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம். அந்த பள்ளிகள் அனைத்தும் ஜூபாப் நடன செயலியை பெரிதும் வரவேற்றுள்ளன. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நடன பயிற்சிகளை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மேற்கொண்டால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கிடைப்பதோடு அவர்கள் உள்ளங்களும் உற்சாகமடையும்," என்று கூறினார். 


ஜூபாப் நடன செயலி குறித்து விளக்கிய போது உலகநாயகன் கமல்ஹாசன் மிகவும் பாராட்டியதாக கூறிய ஷெரீஃப், செயலியை துவக்கி வைத்ததற்காக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 


இது குறித்து மேலும் விவரங்களுக்கு திரைப்பட நடன இயக்குநர் ஷெரீஃப்பை 9843261718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 



***



No comments:

Post a Comment