தி லிட்டில் மெர்மெய்ட்’ இயக்குநர் ராப் மார்ஷல், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்!*
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.
மிகச்சிறந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராப் மார்ஷல் இந்தியப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய நடிகர்களுடன் பணிபுரிவதில் அவருக்கு உள்ள ஆர்வம் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் உடனடியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரைக் குறிக்கும் விதமாக, ‘நாட்டு நாட்டு நடிகர்கள்’ என்று பதிலளித்தார். இதுமட்டுமல்லாது, இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக அவர்களின் தோற்றம், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மற்றும் அசாதாரண நடன திறன்களைப் பாராட்டினார்.
இந்திய சினிமா உலக அளவில் வளர்ந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் இயக்குநர் ராப் மார்ஷலின் இந்தக் கூற்று சான்றாகும்.
'தி லிட்டில் மெர்மெய்ட்' திரைப்படத்தை டிஸ்னி இந்தியா மே 26, 2023 அன்று ஆங்கிலத்தில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
No comments:
Post a Comment