*'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது.*
திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம் தயாராகிறது.
மும்பை, இந்தியா- ஏப்ரல் 22, 2024 - பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது.
தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக இந்த தொன்மை வாய்ந்த கதையை பெரிய திரையில் கொண்டு வருவதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். உலகளாவிய சூப்பர் ஸ்டார் யாஷ்ஷை சந்தித்து தனது லட்சியங்களை குறித்து விவாதித்திருக்கிறார். அதன் போது யாஷ்ஷின் உணர்வும் இவருடன் ஒத்திருந்ததை அறிந்தார். மேலும் இரண்டு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு வருவதற்கான லட்சியத்துடன் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
பிரபல இயக்குநர் நித்தேஷ் திவாரி- DNEG நிறுவனத்துடன் இணைந்து, இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் ஆகியோருடன் இணைந்துள்ளார். இவர்கள் இணைந்து இந்திய புராணங்கள் மற்றும் கதை சொல்லும் மரபுகளில் காலத்தால் அழியாத அணுகுமுறையை உலக அரங்கில் வெளிப்படுத்த... ஒரு மகத்தான பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா பேசுகையில், '' அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகாலம் வாழ்ந்து.. மற்ற நிறுவனங்களை விட கடந்த பத்து ஆண்டுகளில் இணையற்ற வணிக வெற்றியையும், அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஒரு வணிகத்தையும் உருவாக்கினோம். எனது தனிப்பட்ட பயணமும் என்னை வழிநடத்தியது. ராமாயணத்தின் வியக்கத்தக்க அளவிலான கதைக்கு நியாயம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை உரிய கவனிப்புடனும், மரியாதையுடனும் அணுகுகிறேன்.
தொடக்கத்தில் இருந்தே எனது சவால்கள் இரண்டு மடங்குகளாக இருந்தன. ஒரு கதையின் புனித தன்மையை மதிப்பது.. அதனுடன் வளர்ந்த நம் அனைவராலும், இதனை ஆச்சரியப்படும் வகையில் அதை உலகிற்கு கொண்டு வருவது.. இந்தக் கதையை சர்வதேச பார்வையாளர்கள் பெரிய திரை அனுபவமாக ஏற்றுக்கொள்வர்.
நமது கலாச்சாரத்தின் தனித்துவமான சிறந்த விசயங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஆசையை... யாஷ்ஷை சந்தித்தபோது அவரிடமும் இருந்ததை நான் உணர்ந்தேன். கர்நாடகாவிலிருந்து 'கே ஜி எஃப் 2' வின் நம்ப முடியாத சர்வதேச வெற்றிக்கான அவரது பயணத்தால் ஈர்க்கப்பட்டு, எங்களின் எல்லா கதைகளிலும் மிகப்பெரிய உலகளாவிய தாக்கத்தை உருவாக்க உதவும் இவரை தவிர, சிறந்த கூட்டாளரை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் உயிரை சுவாசிக்கும் அவரது மறுக்க முடியாத திறனுடன் யாஷ் ஒரு சர்வதேச அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தீவிர ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் தனது அனைத்து படங்களின் ஆக்கபூர்வ தயாரிப்பாளராக யாஷ் பல புதுமைகளையும், அனுபவத்தையும் கொண்டு வருகிறார். அவர் ஈடுபடும் ஒவ்வொரு திட்டமும் பார்வையாளர்களிடம் ஆழமான அளவில் எதிரொலிக்கிறது.'' என்றார்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் பேசுகையில், '' இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதை நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன். இந்நிறுவனத்தின் பின்னணியில் சக இந்தியர் ஒருவர் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல்வேறு அமர்வுகளில் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இதன் போது தற்செயலாக இந்திய சினிமாவுக்கான தொலைநோக்குப் பார்வையில் எங்களின் கருத்தாக்கம் சரியாக இணைந்தது. நாங்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தோம். இந்த விவாதங்களின் போது ராமாயணமும் இடம்பெற்றது. நமித் தன்னுடைய வேலைக்கான அட்டவணைகளில் இதனை ஒரு பகுதியாக கொண்டிருந்தார். ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. அதற்காக என் மனதில் ஒரு அணுகுமுறையும் இருந்தது. ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம்.
ரசிகர்களை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தும் படைப்பு மற்றும் சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது.மேலும் அனுபவமிக்க இரண்டு தயாரிப்பாளர்களும் இப்படத்திற்காக இணைந்திருக்கின்றனர்.
நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.
இது தொடர்பாக நமித் மல்ஹோத்ரா கூறுகையில், '' இதுவரை எந்த திரைப்படமும் சாதிக்க முடியாத வகையில் இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு முன் வைக்கும் இந்திய படம் இது. கடந்த 30 வருடங்களாக ஒரு கேரேஜ் ஸ்டார்ட் அப்பை அதன் துறையில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான நிறுவனமாக உருவாக்கி வரும் மூன்றாம் தலைமுறை திரைப்பட தயாரிப்பாளராக எனது அனுபவங்கள் அனைத்தும் இந்த தருணத்திற்கு இட்டுச் சென்றதாக உணர்கிறேன். நமது வியாக்கியானம் சமரசமின்றி சொல்லப்பட்டு, இந்திய இதயங்கள் தங்கள் கலாச்சாரத்தை இப்படி உலகம் முழுவதும் கொண்டு வருவதை கண்டு பெருமிதம் கொள்ளும் வகையில் இப்படம் தயாராகும். இந்த காவிய கதையை அக்கறையோடும், கவனத்தோடும், உறுதியோடும் சொல்ல எங்களது திரைப்படத் தயாரிப்பாளர்கள்- நட்சத்திரங்கள்- தொழில்நுட்ப குழுவினர்கள் -முதலீட்டாளர்கள்.. வரை உலகில் மிகச்சிறந்த திறமையாளர்களை சேகரித்து வருகிறோம். நாங்கள் ராமாயணத்தை திரைப்படமாக உருவாக்குவதைப் பற்றி நான் ஆச்சரியப்படும் அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். மேலும் உலகெங்கிலும் உள்ள சினிமா திரைகளில் சிறந்த இந்திய கலாச்சாரம் மற்றும் கதை சொல்லலை சர்வதேச பார்வையாளர்கள் விரைவில் அனுபவிப்பார்கள்.'' என குறிப்பிட்டார்.
''ராமாயணம் நம் வாழ்வில் பின்னப்பட்டிருக்கிறது. எங்களுக்கு அது நன்றாகத் தெரியும் என்று நம்புகிறோம். ஆனாலும் இராமாயணத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது புதிய ஞானத்தை வெளிப்படுத்துகிறது. புதிய அறிவை தூண்டுகிறது. தனித்துவமான பார்வைகளை வழங்குகிறது.'' என குறிப்பிடும் யாஷ் தொடர்ந்து பேசுகையில், '' என்றும் சிரஞ்சீவி தன்மையுடன் இருக்கும் இந்த காவியத்தை வெள்ளி திரையில் பிரம்மாண்ட காட்சி மொழியாக மொழிபெயர்த்து அதன் அளவை... அதன் வீரியத்தை... அதன் அடர்த்தியை... கௌரவிப்பதே எங்கள் நோக்கம். அதன் மையத்தில் இது கதை, உணர்ச்சிகள் மற்றும் நாம் விரும்பும் நிலையான மதிப்புகளின் நேர்மையான மற்றும் உண்மையுள்ள சித்தரிப்பாக இருக்கும். இது ராமாயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பயணம். படைப்பாற்றல், துணிச்சலான ஆய்வு மற்றும் எங்களின் உறுதிப்பாட்டின் சான்றாகும். மேலும் இதன் போது எங்களுடைய நேர்மையான கதை சொல்லும் உத்தியும், உறுதியான நிலைப்பாடும் இடம்பெறும். '' என்றார்.
பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ பற்றி....
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தலைமையில் இயங்கும் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ- ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம், புதுமையான மற்றும் அற்புதமான உலகளாவிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.
பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோ தற்போது மூன்று பெரிய மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்திய காவியமான இராமாயணம் எனும் திரைப்படத்தை 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனத்துடனும், 'அனிமல் ஃபிரண்ட்ஸ்' எனும் திரைப்படத்தை லெஜன்ட்ரி எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனத்துடனும், அனிமேட்டட் திரைப்படமான 'கார்ஃபீல்ட்' எனும் திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடனும் இணைந்து தயாரித்து வருகிறது.
மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி...
'ராக்கிங் ஸ்டார்' யாஷ் தொடங்கி இருக்கும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் - ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் படைப்பாற்றல் திறன்களை வளர்ப்பதற்கும், வித்தியாசமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
இந்நிறுவனம் தற்போது இரண்டு பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. 'டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரௌன்- அப்ஸ்' எனும் திரைப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. மேலும் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து 'ராமாயணம்' படத்தை தயாரிக்கிறது.
No comments:
Post a Comment