Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 19 April 2024

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*

 



  நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து. நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 

  இன்ஸ்பெக்டர் ரிஷி இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.


மும்பை, இந்தியா- 2024, ஏப்ரல் 18 - இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அதன் உலகளாவிய பிரீமியரைத் தொடர்ந்து, பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடராக குறிபிடத்தக்க வகையிலான சாதனையை படைத்துள்ளது. மனதை ஆழ்ந்துபோகச் செய்யும் அதன் கதை சொல்லும் பாணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த, திகில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கிறது. அனைத்தையும் சந்தேகக் கண்களோடு அணுகும் ஒரு காவல் துறை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ரிஷி நந்தன்- மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் குறித்த விசாரணையைத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை அவர் எதிர்கொள்ளும் வகையில், அழுத்தமாக கதையை விவரிக்கிறது. 


இன்ஸ்பெக்டர் ரிஷி திகிலூட்டும் மர்மம் நிறைந்த…. மூளையைக் கசக்கும் இந்த வழக்கின் விசாரணையின் ஊடே பயணிக்கையில், குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும்… தனது  ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும்…. இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார். அந்த அடர்ந்த வனத்தில் அடங்கியுள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வந்து, இந்த விவரிக்க இயலாத நிகழ்வுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகளை கண்டறியும் பொறுப்பு ரிஷிக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு உதவி காவல் ஆய்வாளர்களின் துணையோடு, இந்த மூவர் கூட்டணி... அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு பயணிப்பதுடன் மட்டுமல்லாமல்…. அவர்களின் மன உறுதிக்கும்,  செயல்திறனுக்கும் சவால் விடும் அமானுஷ்யமான சித்து விளையாட்டுக்களுக்கு எதிராகவும் போராடு கிறார்கள். 


இந்தத் தொடர் விமர்சகர்களிடமிருந்து அமோகமான வரவேற்பை பெற்றதோடு உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தண்டுவடத்தை சில்லிட்டு உறையச்செய்யும் இந்த மனக் கிளர்ச்சியூட்டும் அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள்… அவர்களின் இருக்கையின் நுனியில் கட்டுண்டு கிடந்தனர். தமிழ்நாட்டின் உள்ளார்ந்த பகுதியில் அமைந்த ஒரு சிறிய கிராமத்து கதையாக, இதனை கச்சிதமாக பொருத்தி, மிக அற்புதமாக வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள இந்த தொடர், உலகளாவிய பார்வையாளர்களிடையேயிருந்து பல்வேறு கோணங்களில் சரியான விமர்சனங்களை பெற்றதுடன் பெருமளவிலான மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும், வரவேற்பையும் பெற்றது. இன்ஸ்பெக்டர் ரிஷி பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment