Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Thursday, 11 April 2024

கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’

 *’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!*







தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊடகங்களும் படம் குறித்து பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளது. 


இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 


இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் ஷங்கர், எடிட்டர் லோகேஷ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் பூர்னேஷ் ஆகியோர் உடனிருந்து கெளரவித்தனர். இயக்குநராகத் தனது படங்களின் மூலம் பல வெற்றிகளைக் குவித்த பாரதிராஜா நடிகராகவும் இப்போது உச்சம் தொட்டுள்ளார். அதற்குக் ‘கள்வன்’ படமே சான்று. அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம் எனவும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு.

No comments:

Post a Comment