Featured post

Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to

 *Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to redefine entertainment on the big screens!*   In an unpreced...

Friday 12 April 2024

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின்

 *இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.*



#மாசி_வீதியின்_கல்_சந்துகள் என்ற இத்தொகுப்பினைக் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்.


இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று

கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு

தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால்

எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது

தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது.

பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள

எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.


வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,

பக்கம் : 256

விலை ; ரூ.320 

( GPay / PhonePay 9940446650 )


இந்தியாவுக்குள் அஞ்சல் இலவசம்.

No comments:

Post a Comment