Featured post

ஜியோஸ்டார் இந்த பண்டிகைக் காலத்தை மேலும் பிரம்மாண்டமாக்குகிறது; இந்தியா முழுவதும் ஆறு பிக்பாஸ் பதிப்புகளை ஒன்றிணைக்கிறது மற்றும் ‘India’s Bigg Reality

 *ஜியோஸ்டார் இந்த பண்டிகைக் காலத்தை மேலும் பிரம்மாண்டமாக்குகிறது; இந்தியா முழுவதும் ஆறு பிக்பாஸ் பதிப்புகளை ஒன்றிணைக்கிறது மற்றும் ‘India’s ...

Monday, 20 July 2026

*72-வது தேசிய திரைப்பட விருதுகள்: 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்:

*72-வது தேசிய திரைப்பட விருதுகள்: 10

தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்: விருதாளர்களுக்கு TFAPA-வின் மனமார்ந்த பாராட்டுகள்*






*72-வது தேசிய திரைப்பட விருதுகள் 2026 ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், தமிழ்த் திரைப்படத் துறை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று தனது பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தைப் பதித்துள்ளது.*


இந்தச் சாதனை, தமிழ்த் திரைப்படங்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் தரமான கதை சொல்லும் ஆற்றலுக்கு கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரமாகும்.


தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்:


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி

சிறந்த படத்தொகுப்பு – ஆர். கலைவாணன்

சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்


நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.

சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு

சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்

சிறப்பு நடிப்பு பாராட்டு (Special Mention) – நடிகர் தனுஷ்


தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது.


கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த, சி. பிரேம் குமார் இயக்கிய 'மெய்யழகன்' திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) விருதைப் பெற்றது.


தமிழ் குறும்படமான 'ப்ளூ' திரைப்படத்திற்கு, டி. எஸ். ஹரி ஹர சுதன் சிறந்த ஒலி வடிவமைப்பு (Best Sound Design) தேசிய விருதைப் பெற்றார்.


TFAPA-விற்கு பெருமை தருணம்:


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமான (TFAPA) எங்களுக்கு இந்த ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகள் மிகவும் பெருமைக்குரியதாகும். எங்கள் தலைவர் திரு. டி.ஜி. தியாகராஜன் தயாரித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்ற உயரிய தேசிய விருதைப் பெற்றதோடு, அத்திரைப்படத்தின் நாயகன் தனுஷ், தனது சிறப்பான நடிப்பிற்காக Special Mention விருதையும் பெற்றுள்ளார்.


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), தேசிய அளவில் தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. விருதுகளை வென்ற அனைவரும் எதிர்காலத்திலும் மேலும் பல உயரிய சாதனைகளைப் படைக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்.


நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)


---




*July 18, 2026*


*72nd National Film Awards – Tamil Film Industry bags 10 National Awards – TFAPA Congratulates the Winners*


*The Tamil Film Industry has added another glorious chapter to its illustrious history by securing 10 National Film Awards at the 72nd National Film Awards, announced on 18th July 2026 for the films released in 2024. This remarkable achievement reflects the creative excellence, technical brilliance, and storytelling strength of Tamil cinema.*


Amaran: RaajKamal Films International Kamal Haasan’s film featuring Sivakathikeyan and Sai Pallavi won three National Awards:

1. Best Director: Rajkumar Periasamy

2. Best Editing: R. Kalaivanan

3. Best Background Music: G.V. Prakash Kumar


Maharaja: The most talked about film by Nithilan Saminathan with Vijay Sethupathi won two National Awards:

1. Best Action Choreography: Anl Arasu

2. Best Supporting Actress: Sachana Namidass


Captain Miller: This period drama by Arun Matheshwaran with Dhanush won two National Awards:

1. Best Feature Film promoting National, Social and Environmental Values.

2. Special Mention Award for Actor Dhanush for his acting in the film.


Raayan: Won the Best Tamil Film for the year at National Awards.


Meiyazhagan: Won the Best Sound Mix award.


Blue: This Non-feature film won the Best Sound Design award for TS. Hari Hara Sudhan.


It is a special moment for all of us at TFAPA as our President Shri T.G. Thyagarajan produced film Captain Miller received the prestigious Best Feature Film promoting National, Social and Environmental values along with a Special Mention award for the film’s lead actor Dhanush. 


Tamil Film Active Producers Association (TFAPA) extends its heartfelt congratulations to all the filmmakers, artists, technicians, producers, and creative teams whose exceptional work has brought national recognition to Tamil cinema and wishing them many more.


Office Bearers & Members

Tamil Film Active Producers Association (TFAPA)

No comments:

Post a Comment