Featured post

Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness*

 *’Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness* _*Saranraj Senthilkumar’s ...

Tuesday, 15 September 2026

நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான 'மண்டவெட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

 *நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான 'மண்டவெட்டி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு!*



சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படம் அச்சம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் அறியப்படாத மர்மங்களை உள்ளடக்கிய ஒரு அமானுஷ்ய உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


தற்போது வெளியாகியுள்ள 'மண்டவெட்டி' திரைப்படத்தின் இரண்டு நிமிட டீசர் மூலம் இந்த திரைப்படத்தை சுற்றியுள்ள மர்மம் மேலும் தீவிரமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் அச்சம் தோன்றக்கூடிய பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. அறிந்தவற்றுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையிலான எல்லை மெல்ல மறைந்து போகும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காட்சியுடன் தொடங்குகிறது. அவரது இருப்பே உடனே அச்சத்தை ஏற்படுத்துகிறது.


அதனைத் தொடர்ந்து, மர்மமான சம்பவங்கள், துண்டு துண்டான உரையாடல்கள் மற்றும் தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைப் புரிந்துகொள்ள முயலும் கதாபாத்திரங்களின் பதற்றமான காட்சிகள் என டீசர் நகர்கிறது. இந்த உரையாடல்களின் மையத்தில் ‘செஞ்சி சாமி' எனப்படும் மர்மமான சக்தி இடம்பெறுகிறது. சுற்றிலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களுடன் இந்த சக்திக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. ஆனால், டீசர் எந்தவொரு விடையையும் வெளிப்படையாகக் கூறாமல் மர்மத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிய்ய்ம் அதைவிட பயமுறுத்தும் மற்றொரு உண்மைக்கு அழைத்து செல்லும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.


‘மண்டவெட்டி' திரைப்படத்தின் காட்சியமைப்பும் இந்த அமானுஷ்ய உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருள் சூழ்ந்த நிழல்கள், கதைக்களத்திற்கேற்ற இடங்கள், கதாபாத்திரங்களின் முகபாவனைகள் மற்றும் கணநேரத்தில் தோன்றி மறையும் காட்சிகள் ஆகியவை தீபக் வேணுகோபாலின் பின்னணி இசையுடன் இணைந்து டீசரின் பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்கின்றன. உளவியல் ரீதியிலான அசௌகரிய உணர்வையும் அமானுஷ்ய மர்மத்தையும் முன்னிறுத்தும் இந்த டீசர், நாட்டுப்புற நம்பிக்கைகளும் மனிதர்களின் அச்சமும் மோதும் ஒரு கதையை எதிர்பார்க்க வைக்கிறது.


திரைப்படத்தின் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். பலவீனம், கோபம், வேதனை மற்றும் ஆன்மிக மர்மம் என பல்வேறு உணர்வுகளை கொண்ட கதாபாத்திரமாக திரையில் தோன்ற அவர் மேற்கொண்டுள்ள மாற்றத்தையும் டீசர் காட்டுகிறது. மேலும், செஞ்சி சாமி என்பது உண்மையில் என்ன, இந்த உலகையே அதன் இருப்பு ஏன் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது என்ற கேள்விகளையும் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்புகிறது. 


டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி' திரைப்படம், உளவியல் ரீதியான பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் இருண்ட அமானுஷ்ய கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகர்கிறது.


இப்படத்திற்கு பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குணா பழனிசாமி படத்தொகுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை கெளதம் வடிவமைத்துள்ளார். சங்கீதா சென் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். டோனி ஜெ ஒலி கலவைப் பணியை மேற்கொண்டுள்ளார். பாலகங்காதரன் டிஐ கிரேடிங் பணிகளை கவனித்துள்ளார். விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். மகேந்திரன் கந்தசாமி தயாரிப்பு மேலாளராகவும், நர்மதா மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment