Featured post

popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees

 popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees* *Velmurugan thanks the Hon’ble Chief Mini...

Showing posts with label Music Director Hip Hop Tamizha. Show all posts
Showing posts with label Music Director Hip Hop Tamizha. Show all posts

Thursday, 24 October 2019

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம்



ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக  சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

டிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.


விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

“இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன..
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன..

எனும் பா .விஜய்-யின்  வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you tube ஹிட்டாகி வருகிறது. இளைஞர்கள் பிரத்யேகமாக நடனம் அமைத்து இணையதள யூடியூப்பில் வெளியிட்டுவருகிறார்கள்.


நவம்பர் 15ல் இப்படத்தின் இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீஸர் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக  முழு ஆக்‌ஷன் பாணியில் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கபீர் துன்சிங், யோகிபாபு, சாரா, ஆகான்ஷா பூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை - ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு - டட்லீ

எடிட்டிங் -  N B ஶ்ரீகாந்த்

ஸ்டண்ட் - அன்பறிவ்.
Song lyric:

நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...
நெஞ்சில் இனிச்சாலும்...
இல்ல வலிச்சாலும்...
கையில் அணைச்சாலும்...
மண்ணில் பொதச்சாலும்...

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...

புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா...
கூட வந்த ஆசையை...
கூந்தலுக்குள் சூடவா...

நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே காத்து கிடக்கிறேன் நான்
நீ மௌனமாகவே நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே...
உன்னில் காதல் இல்லை தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்...

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்னை நினச்சே...
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே...
கனவுல கட்டி புடிச்சேன்

உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நெனச்சே தெனம் செத்து பொழச்சேன்

கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இங்கு பாலை வெளியில் கொல்கிறாயோ

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்...
என்ன மொறச்சாலும்...
தினம் நெனச்சாலும்...
சுட்டு எரிச்சாலும்...
நெஞ்சில் இனிச்சாலும்...
இல்ல வலிச்சாலும்...
கையில் அணைச்சாலும்...
மண்ணில் பொதச்சாலும்...

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி    

Tuesday, 3 September 2019

சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.



“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். 



இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது.

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். 

விஷால்-  நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர்  “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.  எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது.அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 


தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை.


 நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன்.  ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம்.  எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால்  அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது. 



இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே  பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு  வைத்துள்ளோம். 



இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர்  பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம். 


இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது .கதை , இயக்கம்: சுந்தர்.சி .
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.
இசை: ஹிப் ஹாப் தமிழா.
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்.
வசனம்: பத்ரி.
கலை: துரைராஜ்.
ஸ்டண்ட்: அன்பறிவ்.
நடனம் ; பிருந்தா, தினேஷ்.
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு: ட்ரைடென்ட் ரவீந்திரன் .