Featured post

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய

 *அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!* மலையாள முன்னணி நட்சத்திர ...

Saturday, 2 January 2021

ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின்

 ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே  திரைப்படத்தின்   "அழகுத்தளிரே"   (லிரிக்கல் வீடியோ) பாடல் 


புத்தாண்டு தினமான நேற்று  சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான  அழகுத்தளிரே  நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது,  தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில்  அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.  ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில்  வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

U சான்றிதழோடு திரைக்கு வர

 U சான்றிதழோடு திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே! 

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வே படம் தணிக்கைக்குழு பாராட்டி    U  சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன்  மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.   நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார்,  இரண்டாம் நாயகியாக  காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.  மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவை  R. வேல் கையாண்டுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS  கையாண்டுள்ளார். 



கலை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் இசை ஞானி இளையராஜா ஒரு பாடலும் பாடியுள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் புதிய கெட்டப்! - வாழ்த்து மழையில் நடிகர் வையாபுரி

 வைரலாகும் புதிய கெட்டப்! - வாழ்த்து மழையில் நடிகர் வையாபுரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய 

இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’ 

நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல 

இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
















இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக 

வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி 

வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.


“யாரு...ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா...”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது 

வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி 

வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள்.


ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று சோசியல் மீடியா முழுவதும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வலம் வர, 

இது பற்றி அவரிடமே கேட்ட போது, ”புத்தாண்டில் புதுஷாக எதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப சாதாரணமாக எடுத்த போட்டோ 

ஷூட் தான் இது. இதுவரை நான் போட்டோ ஷூட்டே எடுத்ததில்லை. இது தான் முதல் முறை. இந்த போட்டோக்களை என் திரையுலக 

நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு என் புதிய கெட்டப் புகைப்படங்களை மக்கள் வைரலாக்கி 

வருகிறார்கள். சில மணி நேரங்களில் பல லட்சம் லைக்குகளை பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். எனது புதிய முயற்சிக்கு மக்கள் 

இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.


இயக்குநர்கள் பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, திரைப்படங்களிலும் உங்களை வேறு மாதிரி காட்டணும், 

என்று கூறுகிறார்கள். இது என் பல நாள் கனவு. காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் அல்லாமல், அனைத்து வேடங்களிலும் நடிக்க 

நான் ரெடியாக இருக்கிறேன். எனது இந்த ஆசையை இந்த போட்டோ ஷூட் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருப்பது இரட்டிப்பு 

மகிழ்ச்சியாக இருக்கிறது.


இயக்குநர்கள் ஆனந்த் சங்கர், பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம், “சார் உங்களை காமெடி நடிகராக 

இல்லாமல், வேறு ஒரு வேடத்தில் காட்டணும் சார்” என்று சொல்வார்கள், இந்த புகைப்படங்கள் அதை நிஜமாக்கியுள்ளது. எனவே, இந்த 

புத்தாண்டில் எனது சினிமா வாழ்க்கையில் புது திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


காமெடி வேடத்தில் மட்டும் இன்றி, எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி. அப்பா, அண்ணன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் ஒரு கலக்கு கலக்கப் போகிறேன்.” என்று புத்துணர்ச்சியுடன் கூறினார்.


தற்போது எழில் சார் இயக்கத்தில் இரண்டு படங்கள், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஷர்வானந்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் 

உருவாகும் படம், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் வையாபுரி, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் கதாநாயகியின் தந்தை வேடத்தில் நடித்து வருகிறார்.


புத்தாண்டில் புதிய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கும் நடிகர் வையாபுரியை காமெடி நடிகராக கொண்டாடிய கோலிவுட், நல்ல குணச்சித்திர நடிகராகவும் கொண்டாட வேண்டும், என்று வாழ்த்துவோம்.

Friday, 1 January 2021

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் !

 தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் ! 

இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார். அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து வீட்டு விஷேசங்களில் முதலிடம் பெறுபவை. இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் D.இமான். இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி   ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது. 


இது குறித்து இசையமைப்பாளர் D.இமான் கூறியதாவது...


இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியி


ன் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான்  “DI Productions” எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி   ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் ஆடியோ பங்குதாரராக இணைந்திருக்கும் Divo Music நிறுவனத்தாருக்கு எனது நன்றி. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம்.  அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்

Music Director D Imman’s musical journey has comprised an

 Music director D Imman 


Music Director D Imman’s musical journey has comprised an impeccable groovy record of Chartbusters delivered consistently. His melodies are the tranquillizers, and his feet-tapping numbers have become an integral part of the sound system in every happy occasions and festival in homes. Having tasted success with praises and accolades for his works, it’s time for music director D Imman to embark on a journey with production. He has now launched his own production house named ‘DI Productions’, and his maiden venture will be a spiritual album ‘Thank You Jesus’, which will be a full-fledged Christian Gospel album in English comprising eight songs written and crooned by various gospel artists. 



Music director D Imman says, “My journey as a music director had unconditional love and support from fans, whom I believe has been my pillars. With the same efforts and belief, I am launching my production house ‘DI Productions’, and my maiden production will be a devotional one titled ‘Thank You Jesus’. It will be an English album with eight songs written and rendered by gospel music artists. I thank Divo Music for being the audio streaming partner. We will be soon producing Independent Music Scene, and the official announcement regarding it will be out shortly.”

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும்

 " ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் " ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் "





கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் "சினிமா" துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது...  ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன  படங்களும் துவங்கப்பட்டுள்ளன..


இந்நிலையில்

"ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் " திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார்.



மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் "குருதியாட்டம்" படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு "பிளாக் ஷீப்" ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின்  அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக  பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது திறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


திரைத்துறை கொரோனா காலத்தால்  பெரும் அளவில் சோர்ந்து போயுள்ளது . ஆனால் திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் போது, தேக்கி வைக்கப்பட்டுள்ள படைப்புகள் வெளியாகும், சிறந்த படங்கள், எதிர்பார்த்த படங்கள் வெளிவரும் போது சினிமா துறை மீண்டும் புத்துயிர் அடையும், என  திரு.முருகானந்தம் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் "மலர்"

 ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட  குறும்பட டைட்டில் "மலர்" பர்ஸ்ட் லுக்!

பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது.






பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மலர்" டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர்  குறும்படத்தின் கதை.


கயல்விழி என்ற புதுமுக நடிகை


மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார்.


இவர்களோடு "திடீர் தளபதி" சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


அனீஷ் ஒளிப்பதிவில் விசு இசையில் இக்குறும்படத்தை 'ருச்சி சினிமாஸ்' &  'பாஸ்ட் மெஸெஞ்சர்'  இணைந்து வழங்க, P.சுமித்ரா தயாரித்து இருக்கிறார்.


யுவராஜ் பத்திரிகை தொடர்பாளராக உள்ள  இந்த குறும்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

J படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய

 J  படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய பரிமாணத்துடன் புத்தாண்டை வரவேற்கவுள்ளார்.


 


ஜெ 

( J A MYSTIC)

இந்த புதிய திரைப்படத்தில் 

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி 

பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 

திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில்  6 வது  தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.. திரு ஞானசேகர்..( TOUCH SCEEN ENTERTAINENT) திரு எம்.எஸ். முரளி.. (ஓம் ஷீரி சாய் இன்வென்ஷன்ஸ்) .. இணைதயாரிப்பாளார்களாக இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள்

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவுள்ள இத்திரைப்படத்தில் கிஷோர்(பொல்லாதவன்) ஹாரிஷ் பெராடே( மெர்சல்) இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க..  பொம்மு லக்‌ஷ்மி, நேகா, மற்றும் பலர்  நடிக்கின்றனர்..

விலங்குகளும் பங்கேற்க உள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது..

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ளார்.

பாலா ஒளிப்பதிவில்,  இசை இயக்குனர் LV கணேஷ்  இசையில், கலை இயக்கத்தை முருகன் ஏற்றுள்ளார்..  


இப்படக்  குழுவினர் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி  உள்ளனர்.  இரண்டாம் கட்ட  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடும் பணியில் படக்குழு விறுவிறுப்பாக செயல் பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படம் திரில்லர் பாணியில் வெளிவரவிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. 

 

A MYSTIC   திரைப்படக்குழுவினர் புத்தாண்டை  மகிழ்வுடன் வரவேற்கின்றனர்....

மேலும்  இத்திரைப்படம் புது விதமான அனுபவத்தை நிச்சயமாக தரும் என  திரைப்படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு

இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு    அவர்கள் இயக்கவுள்ள படம் 

பிசாசு   2.  இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...  "கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது.. இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்கு களுக்கு செல்வோம்.  நான் தனிப்பட்ட முறையில்




 " மாஸ்டர் "  படத்திற்காக ஜனவரி 13  திரையரங்குக்கு செல்லவுள்ளேன், அனைத்து ரசிகர்களும் மீண்டும்  திரையரங்கு களுக்கு செல்ல வேண்டும் ,  திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவு வேண்டும் என கேட்டு கொள்கிறேன். என இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.