*சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்*
*‘இரவின் விழிகள்’ பட நாயகியின் கையை பிடித்து இழுத்த ரோமியோக்கள் ; சாட்டையால் விளாசி விரட்டியடித்த ( தளபதி ) விஜய் ரசிகர்கள்*
*‘இரவின் விழிகள்’ படத்தின் ‘வாடா கருப்பா” பாடல் படப்பிடிப்பில் சாமி வந்து ஆடிய மலைக் கிராமத்துப் பெண்கள்*
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பிங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்சி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப் படம் வலைத்தளங்களை
வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இரவின் விழிகள் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.
விரைவில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இப் படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்தபோது அந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த சில இளைஞர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அத்துமீறி படத்தின் கதாநாயகி நீமா ரேவை கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ய முற்பட்டனர். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் அவர்களை பொறுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
பின்னர் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு சில ( தளபதி ) விஜய் ரசிகர்கள் உதவியோடு படப்பிடிப்பிற்காக வைத்திருந்த சாட்டையை எடுத்து சுழற்றிய பிறகே அந்த ரோமியோக்கள் ஆளைவிட்டால் போதும் என தலை தெறிக்க ஓடினார்களாம். இந்த நிகழ்வால் கதாநாயகி நீமா ரே ரொம்பவே பயந்துபோய் விட்டாராம்.
அதேபோல அன்றைய தினம் இரவே ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடல ஏற்படுத்திய அதிர்வில் அந்த பகுதியில் இருந்த பெண்கள் சிலருக்கு இயல்பாகவே சாமி வந்து ஆடத் துவங்கி விட்டனர். காலையில் நடந்த சம்பவத்திலேயே அதிர்ந்து போயிருந்த நாயகி நீமா ரே இதை பார்த்து இன்னும் மிரண்டு போனாராம். அதன் பிறகு அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியதில் மறுநாள் படப்பிடிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு மாறினாராம் நீமா ரே.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க ஆர்.இராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும் நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.
*மக்கள் தொடர்பு ; A.ஜான்*
.
No comments:
Post a Comment