Featured post

Madharaasi Movie Review

 Madharaasi Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharasi  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு  தான் release ஆய...

Thursday, 4 September 2025

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி

*பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது*



லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.


இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தை தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், பிரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம்


மும்பை, இந்தியா — செப்டம்பர் 4, 2025 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர் கூலியின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும், இந்த படம் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, இந்தியா மற்றும் உலகளவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் வீடியோவில் மட்டுமே கிடைக்கும்.


விசாகப்பட்டினம் துறைமுகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்தும் ஆபத்தான விளையாட்டுக்குள் இழுத்துச் செல்கிறது. நீதிக்கான போராட்டம், விசுவாசம், வாழ்வாதாரம், கிளர்ச்சி ஆகியவற்றின் கலவையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத கவர்ச்சி சேர்ந்துள்ளதால், கூலி அவரது 50 ஆண்டு திரை உலகப் பயணத்தை கொண்டாடும் நினைவுச் சின்னமாகவும், புதிய தலைமுறை ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான திரில்லராகவும் திகழ்கிறது


  

No comments:

Post a Comment