Featured post

Bigg Boss Tamil 10: The hunt for the next Bigg Boss contestant begins : here’s everything to know

 *Bigg Boss Tamil 10: The hunt for the next Bigg Boss contestant begins : here’s everything to know* https://www.instagram.com/reel/Db70SHER...

Wednesday, 28 May 2025

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில்

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி'  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*







*மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ்  வாழக்கையை பிரதிபலிக்கும்,  அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம்   'மெட்ராஸ் மேட்னி'*


வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்… 


பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..

இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர்.  இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்  பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப சின்ன படம் ஆனால் ரொம்ப வலிமையான படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி  


ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே.  பேசியதாவது..  

ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாகத் தொடங்கிய பயணம், 15 வருடங்கள். இங்கு இருக்க ஒளிப்பதிவாளராக ஆனதற்குக் காரணமான, இப்படத்தின் வாய்ப்பைத் தந்த கார்த்திகேயன் அண்ணாவிற்கு நன்றி.  இப்படம் கார்த்திக் உடன் இணைந்து 3 வருடங்கள் முன்பு தொடங்கியது. இப்படம் உருவாகத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்த மோனிகா, ஷான், வீரமணி, ஆகியோருக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் படம், நீங்கள் கவனிக்க மறந்த, தவறவிட்ட தருணங்களை உங்களுக்கு இப்படம் ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி. 



இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியதாவது...

இயக்குநர் கார்த்திகேயன் அண்ணாவுடன் மூன்று வருடம் முன்பு ஒரு குறும்படத்தில் ஆரம்பித்த பயணம், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்தப்படம். முதல் படத்திலேயே வடிவேலு முதல் பல ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு. நான் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது… 

இந்தப்படம் செய்யக்காரணமான வாய்ப்புத் தந்த கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி, தயாரிப்பாளராக அவர் எனக்கு பெரும் சுதந்திரம் தந்தார், அவர் இயக்குநராகத் தான் செயல்பட்டார், படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை எங்கு கோண்டு செல்வது என்று யோசித்த போது தான் ட்ரீம் வாரியர்ஸ் வந்தார்கள் அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி. 


 


எடிட்டர் சதீஷ்குமார் பேசியதாவது…

இந்தப்படம் செய்தது மிக மகிழ்ச்சி.குழந்தை பிறக்கும் முதல் தடவை ஒரு பெண் குழந்தையாக இருந்தால் எவ்வளவு சந்தோசமோ அவ்வளவு சந்தோசம். படம் திரையிட்ட இடங்களிலிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி. 



நடிகர் சாம்ஸ் பேசியதாவது…

சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு சார் வரக்காரணம் மோனிகா மேடம் தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால் கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது.  அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…

என்னை இதற்கு முன் எமகாதகி பிரஸ்மீட்டில் கோடம்பாக்கத்து அம்மாவாக அழகாக கொண்டாடுனீர்கள், ஆனால் அப்போது நான் உங்களிடம் வித்தியாசமான கதாப்பாத்திரம் செய்ய ஆசை என சொல்லியிருந்தேன் . இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் மணிக்கு நன்றி. ரொம்ப சின்ன பாத்திரம் தான் என்றாலும் மிக நிறைவான பாத்திரம், இப்படத்தில் நடித்த அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 


நடிகர் விஷ்வா பேசியதாவது…

இது என் முதல் மேடை, எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி, என்னை நானே நம்பமுடியாத அளவு அழகாக காட்டியதற்கு நன்றி. இசையமைப்பாளர் பாலசாரங்கன் அண்ணா அவர் இசையுடன் என் நடிப்பை பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பெயருடன் என் பெயரைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. காளி வெங்கட் மிகச்சிறந்த நடிகர், அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். ஷெல்லி மேம் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். ரோஷிணி அக்காவுக்கும் எனக்கும் கம்மியான சீன் தான்,  அவர் என்னுடன் இயல்பாகப் பேசினார், இந்தப்படம் செய்தது இன்னும் கனவு போல் உள்ளது. அனைவருக்கும் நன்றி, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.  



நடிகை ஷெல்லி பேசியதாவது…

நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம், இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம், அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். அவரது எழுத்துக்கு நன்றி. இந்தப்படத்தில் காளி வெங்கட் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். இந்த புரடக்சன் சினிமாவுக்கு புதுசு, எல்லோரும் ஐடி வேலை பார்த்தவர்கள் யாருக்கும் சினிமா தெரியாது ஆனால் மிகச்சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள், ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம், கண்டிப்பாக இந்தப்படம் உங்களை மகிழ்விக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



நடிகர் கலையரசன் பேசியதாவது…

நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை ஆனால் நான் நடித்த மாதிரி சந்தோசமாக உள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் ரிலீஸ் வரை மட்டும் தான் அதன்பிறகு கண்டென்ட் தான் முடிவு செய்யும். இது ரொம்ப நல்ல படமா தெரிகிறது. நான் ரெண்டு மூன்று தடவை பாக்க வாய்ப்பு  கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன் சாரி.   ஒரு நல்ல படம் வந்தால் எப்படியாவது இண்டஸ்ட்ரிக்குள்  எங்கேயாவது அதைப் பற்றி பேச்சு  வந்துவிடும், இப்படம் பற்றியும் நிறையப் பேர் சொல்கிறார்கள் மகிழ்ச்சி. பிரபு சார் திரைத்துறையில் நிறையப் பேரை உருவாக்கியுள்ளார், நிறையச் சின்ன படங்களுக்கு ஆதரவு தருகிறார்.  ஒரு கதைக்கு வந்து முகங்கள் கதாபாத்திரங்கள் ரொம்ப முக்கியம். அதுக்கேத்த மாதிரி முகங்களை நடிக்க வைப்பது தான் நல்ல படமாக இருக்குமென்று நம்புகிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் கதைக்கான முகங்களாக இருக்கிறார்கள். காளி வெங்கட் கலைத்துறை தந்தை, அவருக்குள் நிறையக் கதைகள் இருக்கு ஷீட்டிங்கில் இருக்கும் போது,ஆறு மணிக்கு மேல பாடுவாரு, ஆடுவாரு, மிமிக்ரி பண்ணுவாரு, ஏதோதோ சொல்லுவாரு,  நிறைய பேசுவாரு, ஜெபம் பண்ணுவார், அதே மாதிரி நிறையக் கதைகள் சொல்லுவார். அவர் ஊர்ல  இருக்க  ஒரு வளையல் தாத்தான்னு ஒரு கதை சொல்லியிருக்காரு,  எனக்கு அதைப் படமா பண்ண ஆசை,  அவரிடம்  சொல்லியிருக்கிறேன்.  அவருக்குள்ள அழகா  ஒரு பெரிய லைப் இருக்கு. இப்போதே அவருக்குள் 60 வயதுக்கான ஞானம் இருக்கிறது. இந்தப்படத்தில் எல்லோருமே ரொம்ப அழகா நடித்திருக்கிறார்கள். எல்லோரும் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. கார்த்திகேயன் இந்த மாதிரி புதுமையா இன்னும் நிறையப் படங்கள் செய்யுங்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

  



நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது… 

டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு  வரவில்லை, அதற்குக் காரணம் காளி வெங்கட் தான் அவருடன் தான் ஷீட்டில் தான் இருந்தேன், நீங்கள் தந்த பாராட்டுக்கள் என் 15 வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிதாக இருந்தது. இந்த மேடையைக் காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அதற்கு நான் மூன்று காரணங்கள் சொல்கிறேன் முதலி எஸ் ஆர் பிரபு சார் இந்தப்படத்தை வாங்கியுள்ளார், இரண்டாவது டிரெய்லரும் பாடலும் அவ்வளவு நன்றாக உள்ளது, மூன்றாவது ஒரு படம் முடித்துவிட்டு டப்பிங்க் எல்லாம் முடித்து படம் நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும், காளி வெங்கட் அண்ணாவுடன் தான் மூன்று மாதமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன் ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்படியெனில் கண்டிப்பாகப் படம் ப்ளாக்பஸ்டர் தான். இவர் வாழும் இந்த நாட்டில் நானும் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ப்ளாக் அன் ஒயிட் காலத்திலிருந்து, டிஜிட்டல் வரை, சினிமாவில் எல்லா அறிவுரைகளும் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் அவர்களுக்கு நன்றி. நான் இது  மூலமா ஐநா சபைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த வருஷத்துக்கான நோபல் பிரைஸ் காளி அண்ணாவிற்குக்   கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் குழுவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும்.  அனைவருக்கும் நன்றி.




ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது…   

எல்லாருக்கும் வணக்கம். மெட் ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்ல. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய  பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது அது அழகா அமைஞ்ச் படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு, எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம  பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப்  மேட்னி ஷோவா  பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது.   கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



நடிகை ரோஷினி பேசியதாவது…

ஆனந்த சார் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு வந்தது அவருக்கு நன்றி,  நாங்க எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாம அவ்வளவு அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான்  பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி ஆனந்த் சார். கார்த்திக் சார் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது. காளி வெங்கட் சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், அவர் நடிப்பு பயங்கர அமேசிங்கா இருக்கும்.    ஸ்விட்ச் போட்ட மாதிரி ஒரு கேரக்டர்ல இருந்து வேற கேரக்டர்ல அவ்ளோ அழகா பண்ணுவார், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில்  ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மேடம் மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது… 

என் அம்மா  நிறைய இலக்கிய வட்டம்  போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது  எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம்   கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை  இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம்,  ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும்.  இந்தக் கதையை நான்  எழுதி முடித்த பிறகு,  ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான்  வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன்  அப்போதுதான்  காளி சார்   இந்த கதைக்கு ஓகே சொன்னார்,  காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல  மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு.  இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன்  இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது, எல்லோரும் ஆதரவு தாருங்கள், நன்றி




காளி வெங்கட் பேசியதாவது… 

முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு  ரொம்ப ரொம்ப நன்றி.  படம்  முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  







மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை,  ஒரு மாறுபட்ட தளத்தில்,  அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம்,  அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 



ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.


இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Monday, 26 May 2025

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட

 *நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*






நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். 


ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களை பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 


நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களை பகிர்ந்து கொண்டார். அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம்.  தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம்.‌ அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது. 


ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும்  சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.


இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம். 


ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன். 

தற்போது ஹெர் ஸ்டோரீஸ் என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது. இந்த பதிப்பகம் நூறு பெண்களின் கதையை சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராக தங்களது கதையை சொல்ல வேண்டும்.  அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா - இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன் . ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன் / பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்த காணொலியை பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தை பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது.  அந்த வகையில் இந்த சமூகத்திற்கு சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது. 


ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்த கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்த கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். 



என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு. அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரை பாதுகாத்து கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான். 

எல்லா பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள்.  திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 


இப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தெரிகிறது. இந்த படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்,'' என்றார். 


நடிகை அம்பிகா பேசுகையில், ''இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான்.‌ இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன்.  பொழுதுபோக்காக இருக்கிறது. 

இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ''இந்த மேடை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கவர்ச்சிகரமான பெண்களுக்கு மத்தியில் நானும் இருப்பதால் என்னுடைய கவர்ச்சியும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். 


வனிதாவை பற்றி இயக்குநர் வசந்தபாலன் அழகாக குறிப்பிட்டார். வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையை பார்க்கிறேன். நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். அவர்கள் தனக்கு பிடித்தது போல் வாழ்கிறார்கள். சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்த துணிச்சல் என்னை கவர்ந்திருக்கிறது. இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


சினிமாவில் அவர் பல தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்திருக்கிறார். அதை எல்லாம் கடந்து, இன்று வெற்றிகரமான பெண்மணியாக வலம் வருகிறார். இந்த சினிமாவை நீங்கள் முழுமையாக நம்பினால், சினிமா உங்களுக்கான இடத்தை நிச்சயமாக வழங்கும். 


இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது எளிதானதல்ல . பெரிய பொருட்செலவில் வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீனிக் கிரியேஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை நல்லதொரு தேதியில் வெளியிடுங்கள். ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் இந்த படக்குழு வெற்றி பெற வேண்டும். இந்தத் திரைப்படம் மத்திம வயதில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் நல்ல தேதியில் வெளியானால் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். 


தமிழ் சினிமாவில் 240 படங்கள் வெளியானால் அதில் இரண்டு பேர் மட்டுமே பெண் இயக்குநர்கள். இந்த தருணத்தில் நிறைய பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாகும் போது வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வனதா இயக்கி இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி வெற்றியை அளிக்கும் என நினைக்கிறேன்,'' என்றார். 


நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில், ''நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னை பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை தனது இடது கையால் புறம் தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. 


இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். 


இந்த படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். 


ஷகிலாவை இந்த படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில்  வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார். 


ஷகீலா பேசுகையில், ''வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தை தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம். 


பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்த படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன. 


எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். 


எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா. 


அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்," என்றார். 


ஜோவிகா விஜயகுமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது. 


இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது. 


நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். 


தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், ''தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன்.  அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர். 

இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராக படங்களை தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது. 


ஜோவிகாவிற்காக தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன். படம் நன்றாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் சுந்தர் சி படம் போல் காமெடியாக இருக்கும்.


இப்படத்தில் நாயகன் ராபர்ட் மாஸ்டர் தற்போது கோவாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.  இப்படத்திற்குப் பிறகு அவர் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 


இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.


இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ''இதுவரை 125 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். ஆனால் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றியது சவாலானதாக இருந்தது, மறக்க முடியாததாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் , மாஸ்டர் வனிதா விஜயகுமார், ஜோவிகா என மூன்று டான்கள் இருக்கிறார்கள். இதில் ஜோவிகா தேர்வுதான் இறுதியானதாக இருக்கும். இந்த சிறிய வயதில் அவருக்குள் அபார இசைத்திறமை இருக்கிறது. இதற்கு அவருடைய தாத்தா, பாட்டி தான் காரணம். அவர்களுடைய ஆசி இவருக்கு இருக்கிறது. 


ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் இணைந்த 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சங்கி மங்கி..' எனும் பாடல் 50 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களும் அதனை கடந்து புதிய சாதனையை படைக்கும். 


இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. கிளைமாக்ஸில் சாமி பாட்டு ஒன்றும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் பாடல்களை எழுதியும் இருக்கிறேன். 


இந்தத் திரைப்படத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் - மனைவி என்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.  இந்தப் படத்தில் ராபர்ட் மான்ஸ்டர் நடனத்தை விட நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவருடைய நடிப்பு பேசப்படும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,'' என்றார்.


சதீஷ்-பாலா பேசுகையில், ''நாங்கள் இரட்டையர்கள் அல்ல, மூவர். மதியழகன் சொல்வதை செய்கிறோம். தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதற்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றார். 


இயக்குநர் வனிதா விஜயகுமார் பேசுகையில், ''இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


'பிதா' படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம். 


அம்மாவிற்கு பிறகு அம்பிகா - ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன். ஷகிலா இந்த படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்த படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான். 


வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி பணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது. 


வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான 'அநீதி ' திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. 


நல்ல இயக்குநர் - பெரிய இயக்குநர்-  சிறந்த இயக்குநர் - என யாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் பெயருக்கு முன் 'ரொமான்ஸிக்கல்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.  


இயக்குநர் பி. வாசு சாரிடம் 'பொண்ணு வீட்டுக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா. அவர்களுக்கும் நன்றி. 


சமூக வலைதளங்களில் என்னை பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். 


இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். 'ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ' என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம். 


ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. 


வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.


***

பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை

 *பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு  நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !*




தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!


அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிகை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ்  இலக்கியத்திற்கும், தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியாப் புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக,  நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது.


வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளைப்  பாடல்களாகக் கலந்திட வைத்திருக்கும் இந்தக்  கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரைப் பிரபலங்களும், நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.


திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு,  கோடானு கோடி இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் விழாவை, நா.முத்துக்குமார் welfare core கமிட்டியோடு இணைந்து  ACTC நிறுவனம் பிரம்மாண்ட  இசை நிகழ்ச்சியாக நடத்த இருப்பதில் பெருமை கொள்கிறது.


நாள் : ஜூலை 5, 2025

இடம் : YMCA மைதானம், நந்தனம், சென்னை.


Our Event Committee Members

R.K. Selvamani, R.V. Udayakumar, SKP. Karuna, Director Bala, Director N. Lingusamy, 

G. Dhananjayan, Suresh Kamatchi, Director Mohan Raja, Director Vasanthabalan, 

Director Ram, Director Vijay, Director Rajesh, Writer Bava Chelladurai, Writer Ajayan 

Bala, Writer Vel Murugan

Celebrating The Timeless Legacy of Na. Muthukumar: A Tribute Concert

 *Celebrating The Timeless Legacy of Na. Muthukumar: A Tribute Concert*

 



Warm Greetings to the Tamil Film Fraternity, Press, Media, and Esteemed Guests. 


We are honoured to announce the first-ever tribute concert dedicated to celebrating 

the legendary lyricist, Na. Muthukumar, marking 50 years of his life and his 

unparalleled contributions to Tamil Cinema and literature. 


This special event will pay homage to Na. Muthukumar’s timeless words that have 

touched millions of hearts and continue to inspire generations. It will be a grand 

evening filled with soulful performances by music directors and singers, featuring 

iconic songs penned by the late lyricist and heartfelt moments of his legacy. 


The entire Tamil Film Fraternity will unite to make this event a memorable occasion, 

and reflect on their fond memories and experiences working with Na. Muthukumar. 


This event is being organised by the Na. Muthukumar Welfare Core Committee in 

collaboration with ACTC Events, to ensure a fitting tribute is curated for our beloved 

literary icon. 


The tribute concert will be held on *5th July 2025* at *YMCA Grounds*, Nandanam, 

Chennai.


Be a part of our celebration to honour the life and legacy of Na. Muthukumar, whose 

poetic vision and verses have transformed the world of Tamil cinema and literature. 


For further details, contact: +91 8111 033 022 

E-mail ID: support@actcevents.com 


*Our Event Committee Members*

R.K. Selvamani, R.V. Udayakumar, SKP. Karuna, Director Bala, Director N. Lingusamy, 

G. Dhananjayan, Suresh Kamatchi, Director Mohan Raja, Director Vasanthabalan, 

Director Ram, Director Vijay, Director Rajesh, Writer Bava Chelladurai, Writer Ajayan 

Bala, Writer Vel Murugan

Sameer Ali Khan produces, directs and plays the protagonist in 'Tamil Paiyyan Hindi Ponnu

 Sameer Ali Khan produces, directs and plays the protagonist in 'Tamil Paiyyan Hindi Ponnu', a rom-com, under Super Star Films banner*



*Mansi, Aadukalam Naren, Brahmaji, Sonia Bose, Udhayadheep play key roles in 'Tamil Paiyyan Hindi Ponnu'*


After his debut with 'Kadhal Mattum Vena', filmmaker and actor Sameer Ali Khan is back with his next ambitious project, 'Tamil Paiyyan Hindi Ponnu' – a colourful and entertaining rom-com, produced and directed by him under the Super Star Films banner. Sameer also stars as the protagonist in this stylishly crafted love story.


The film features Mansi as the female lead and includes a strong ensemble cast: Aadukalam Naren, Brahmaji, Ali, Sonia Bose, Mala Parvathi, Deepika Amin, Udhayadheep and Kumki Asvin. 


Speaking about the film, Sameer Ali Khan said, "‘Tamil Paiyyan Hindi Ponnu’ is a vibrant rom-com. We have designed the film with high production value, on par with Bollywood standards, and presented it in a stylish manner. The story revolves around a Tamil boy and a Hindi girl from two very different backgrounds, who fall in love. The film humorously and emotionally captures the challenges they face and how they overcome various obstacles to unite in love."


Born in Thrissur and raised in Coimbatore, Sameer Ali Khan holds a degree in Visual Communication. He made his directorial and acting debut with 'Kadhal Mattum Vena' and now returns with this cross-cultural love story that reflects his cinematic vision and storytelling flair.


The filming of 'Tamil Paiyyan Hindi Ponnu' has been completed across locations including Chennai, Coimbatore, and Puducherry. Post-production work is currently progressing at full swing. Sameer Ali Khan plans to release the film in August this year.


***

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'*



*மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*


'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். 


சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு  கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். 


மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


"திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு 'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்," என்று சமீர் அலி கான் தெரிவித்தார். 


'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட சமீர் அலி கான் திட்டமிட்டுள்ளார். 


***


*

Sunday, 25 May 2025

ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே”

 *ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது*










தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய பிரேக்-அப் பார்வையை இந்த பாடல் முன்வைக்கிறது.


இந்தப் பாடலின் மையக் கரு, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சி அமுக்கங்களை சித்தரிக்கிறது. தனது தோழரான கலைஞரிடம் தன் இதயவலி பற்றி ஒரு பாடலாகக் கொண்டு வரக் கோரும் ஒரு இளைஞனின் பார்வையில் கூறப்படும் இந்த கதை, காதலில் முழுமையாக விழுந்து பின்னர் தனியாக விலகியவர்களுக்கெல்லாம் நெருக்கமாகத் தோன்றும்.


இசை ஒலிப்புத்தாக்கம் கீர்த்தன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ஆன்மீக நிழல்கள் மற்றும் நாட்டுப்புற நடனத் தொகுப்புகளை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ் எழுதிய பாடல் வரிகள் நகைச்சுவை மற்றும் ஐரனியுடன் எச்சரிக்கையாக எழுதப்பட்டு, காதல் இழப்பைப் பற்றிய நுண்ணிய விமர்சனத்தை வெளிப்படுத்துகின்றன. ஆந்தணி தாசன் தனது தனித்துவமான குரலும் உயிரோட்டமான பாடல் வெளிப்பாடுகளும் மூலம் இதனை சிறப்பாக உயர்த்துகிறார்.


தெளிவாக வடிவமைக்கப்பட்ட இசைப் பார்வையில், “போனாலே போனாலே” ஒரு சினிமாக் கதைப்பயணமாகும். இயக்கமும் கான்செப்டும் சந்தோஷ் மேற்கொண்டிருப்பதால், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் கனவுக் காலங்களை மையமாகக் கொண்டு கதையின் கதாநாயகனைப் பற்றிய காட்சிகள் அமைந்துள்ளன. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் நாகேஷ் வி ஆச்சார்யா எடுத்த காட்சிகள் மற்றும் விருது பெற்ற எடிட்டர் சுரேஷ் ஊர்ஸ் செய்த உணர்வுமிக்க எடிட்டிங்கால் இந்த வீடியோ பல அடுக்குகளில் இயங்கும், முழுமையான பார்வை அனுபவமாக அமைந்துள்ளது.


“போனாலே போனாலே” மே 28, 2025 மாலை 6:30 மணிக்கு ஸ்வான் ஸ்டூடியோஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது. இதே நேரத்தில் Spotify, JioSaavn, Amazon Music, YouTube Music மற்றும் பிற முக்கிய ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகிறது.


இந்தப் பாடலின் மூலம், கதைகள், இசை மற்றும் ஃபேஷன் ஆகிய மூன்றின் மூலம் ஆன்மாவை தொட்டுச் செல்லும் உண்மையான தமிழ் இண்டி இசை தயாரிப்பில் ஸ்வான் ஸ்டூடியோஸ் தொடர்ந்து தனது தரநிலையை நிரூபிக்கிறது.


நடிப்பு:


பிரியா துரை


ஜான் பிராங்க்ளின்


கார்த்திகேயன் DK


தொழில்நுட்பக் குழு:


கான்செப்ட் & இயக்கம்: சந்தோஷ்


ஒளிப்பதிவாளர்: நாகேஷ் வி ஆச்சார்யா


எடிட்டிங்: சுரேஷ் ஊர்ஸ்


இசை அமைப்பு & ஒழுங்கமைப்பு: கீர்த்தன்


பாடல் வரிகள்: சந்தோஷ்


பாடகர்: ஆந்தணி தாசன்


VFX: விஷ்வாஸ் குமார்


நடன ஒழுங்காளர்கள்: பிரியா & பல்லவி


துணை நடன இயக்குநர்: ராகுல்


நிறமாற்றம் மற்றும் DI: முருகன்


கலை இயக்கம்: மோகன் பண்டித்


நடனக் கலைஞர்கள்: பிரமோத், பழனி, மணி, கார்த்திக்


ஒளி மற்றும் DOP உதவி: மல்லிகார்ஜுன்


டைட்டில் & போஸ்டர் வடிவமைப்பு: கிரிஷ் & சிவகுமார்


மேக்கப் & ஸ்டைலிங்: கேஷவ்


உடைகள்: சிக்கே கவுடா


ஸ்டூடியோஸ்: கேடில் ஸ்டூடியோஸ், சாமுண்டேஸ்வரி ஸ்டூடியோஸ்


கீபோர்டு & ரிதம் புரோகிராமிங்: கீர்த்தன்


துணை இசை தயாரிப்பு: ரியோ ஆந்தனி


கூடுதல் குரல்கள்: ரெஞ்சித் உண்ணி, ஸ்ரீநாதன், ஆகாஷ்


நேரடி ரிதம்: ராஜு, லக்ஷ்மிகாந்த்


நேரடி ரிதம் ஒருங்கிணைப்பாளர்: ப்யாரேலால்


மிக்ஸிங் & மாஸ்டரிங்: பாலு தங்கச்சன்


ரெக்கார்டிங் இன்ஜினியர்: ஹரிஹரன்


ட்ராக் வொக்கல்ஸ்: அபிலாஷ் என் ஷெட்


ஸ்டூடியோஸ்: சாய் ஸ்ருதி ஸ்டூடியோஸ், 20 dB ஸ்டூடியோஸ்


துணை இயக்குநர்: வினய் பார்த்தசாரதி


மக்கள் தெடர்பபு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Anthony Daasan's Tamil Indie soup song “Ponaaley Ponaaley” – A Soulful Yet Sarcastic Take on Breakups out

 *Anthony Daasan's Tamil Indie soup song “Ponaaley Ponaaley” – A Soulful Yet Sarcastic Take on Breakups out on May 28th*










Following the success of its breakout Tamil indie hit Kadhal Oothikichu, Swan Studios returns with its second original single, Ponaaley Ponaaley —a refreshingly raw and witty portrayal of heartbreak that blends soulful emotion with sharp satire.


At its core, Ponaaley Ponaaley captures the tumultuous emotional aftermath of a breakup. Told through the lens of a boy who seeks solace by asking his performer friend to turn his heartache into music, the narrative resonates universally—speaking to anyone who’s ever given their all in love, only to be left behind.


Musically, the song is a vibrant fusion of spiritual undertones and folk dance elements, composed and arranged by Keerthan. The lyrics, penned by Santhosh, are laced with sarcasm and irony, reflecting a clever yet cathartic commentary on romantic loss. Vocal powerhouse Anthony Daasan lends his signature grit and passion to the track, making it an unforgettable auditory experience.


Visually, Ponaaley Ponaaley is a cinematic journey. Directed and conceptualized by Santhosh, the music video is set in a moody, stylized world and explores the protagonist’s past, present, and imagined future. With breathtaking visuals by cinematographer Nagesh V Acharya and crisp, emotionally precise editing by acclaimed editor Suresh Urs, the video delivers a layered and immersive storytelling experience.


Ponaaley Ponaaley will be released on May 28, 2025, at 6:30 PM IST on the Swan Studios Official YouTube Channel, with audio streaming available simultaneously on Spotify, JioSaavn, Amazon Music, YouTube Music, and all major platforms.


With Ponaaley Ponaaley, Swan Studios reaffirms its commitment to original, high-quality Tamil independent music that speaks to the soul—through story, sound, and style.


*CAST:*

* Priya Durai

* John Franklin

* Karthikeyan DK


*CREW:*

•   Concept & Direction: Santhosh

* Cinematographer: Nagesh V Acharya

* Editor: Suresh Urs

* Composer & Arranger: Keerthan

* Lyrics: Santhosh

* Singer: Anthony Daasan

* VFX: Vishwas Kumaar

* Dance Choreographers: Priya & Pallavi

* Associate Choreographer: Raghul

* Color Grading & DI: Murugan

* Art Director: Mohan Pandit

* Dancers: Pramod, Palani, Mani, Karthik

* DOP Assistance & Lights: Mallikarjun

* Title & Poster Design: Girish & Shivakumar

* Makeup & Stylist: Keshav

* Costumes: Chikke Gowda

* Studios: Kettle Studios, Chamundeshwari Studios

* Keyboard & Rhythm Programming: Keerthan

* Associate Music Producer: Riyo Anthony

* Additional Vocals: Renjith Unni, Sreenathan, Aakash

* Live Rhythms: Raju, Lakshmikanth

* Live Rhythm Coordinator: Pyarelal

* Mixing & Mastering: Balu Thankachan

* Recording Engineers: Hariharan

* Track Vocals: Abhilash N Shet

* Studios: Sai Shruthi Studios, 20 dB Studios

* Associate Director: Vinay Parthasarathi

* Public Relations: Riaz K Ahmed, Paras Riyaz

வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்” மே 30 முதல் திரையரங்குகளில்

 *வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்”  மே 30 முதல் திரையரங்குகளில் 






*திரையுலகினரின் பாராட்டைப் பெற்ற “மனிதர்கள்” திரைப்படம், மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!*


Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர்,  திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,  திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. 


இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.


புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்..   முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார். 


ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா. 


இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம்,  வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகீறது. 


தொழில் நுட்ப குழு 

எழுத்து - இயக்கம் -  இராம் இந்திரா 

ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,

இசை - அனிலேஷ் எல் மேத்யூ ,

படத்தொகுப்பு - தின்சா,

கலை - மகேந்திரன் பாண்டியன்,

பாடல் - கார்த்திக் நேத்தா,

ஒப்பனை - அ சபரி கிரிசன்,

துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன்,

நா யுவராஜ்,

உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன்,

சண்டை பயிற்சி - வின் வீரா,

ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன்,

சப்தம் - சதீஷ்,

வண்ணம் - வசந்த் செ கார்த்திக்,

வரைகலை - ஆன்டனி பிரிட்டோ,

விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்.


தயாரிப்பு (producers):

இராஜேந்திர பிரசாத்,

ஜெ.நவீன் குமார்,

மு.கி.சாம்பசிவம்.


மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா.