Featured post

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்'

 *உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்...

Monday, 27 July 2026

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்லவரும் ஆன்மீக திரைப்படம் " பிரஜாபதி "

 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்லவரும் ஆன்மீக திரைப்படம்     " பிரஜாபதி "











"பிரஜாபதி" இது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல !!


கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி, நாடக வடிவில் இந்தியா முழுவதும் அரங்கேறி, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது. 


இன்று, அந்த மகத்தான ஆன்மீகப் பாரம்பரியம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக உருவெடுத்து , இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் புதிய பயணத்தைத்   APF Production House தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறது.


இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பே " பிரஜாபதி " நாடகத்தை இயற்றி அரங்கேற்றிய முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன்,  இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.


பிரஜாபதி படம் குறித்து இயக்குனர் முனைவர் B.ரூபர்ட்  பகிர்ந்தவை...


 "பிரஜாபதி" இது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை  வெளிப்படுத்தும் ஒரு இறைப்பணியாகும்.


பிரஜாபதி என்பது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், அற்புதங்கள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மாபெரும் திரை அனுபவமாக உயிர்ப்பிக்கும் விவிலியத் திரைப்படமாகும்.


வேதாகமத்தின் அடிப்படையில், உயர்தர திரைப்படத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் பிரஜாபதி, எல்லா மொழிகளையும், எல்லா கலாச்சாரங்களையும், எல்லா தலைமுறைகளையும் சென்றடையும் வகையில் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. 


பிரஜாபதி - மக்களின் திரைப்படம்: இது மக்கள் பங்களிப்பில் (Crowdfunding)  உருவாகும் ஒரு இறைப்பணி.  “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு”என்ற நோக்கத்தை நனவாக்கும் வகையில் பிரஜாபதி திரைப்படம் Crowd Funding தளத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.


பிரஜாபதி திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள், திரைப்படத் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முறை நடிகர், நடிகைகள் அல்லர். அவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தியாக உணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இந்தப் படைப்பில் பங்கெடுத்துள்ளனர். 


விரைவில் பிரஜாபதி திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையில் அனைவரும் காண்பீர்கள் என்றார்.

PRAJAPATHI : A World-Class Spiritual Motion Picture on the Life of Jesus Christ

 PRAJAPATHI :

A World-Class Spiritual Motion Picture on the Life of Jesus Christ

PRAJAPATHI is not merely a film portraying a historical event!












For over 25 years, PRAJAPATHI has been presented as a stage drama across India, touching thousands of hearts and powerfully proclaiming the Good news of Jesus Christ. Today, that cherished spiritual legacy is making its transition from the stage to the silver screen as a world-class cinematic experience, from India to the nations.


Having embraced the noble calling of proclaiming the life history of Jesus Christ to the world through literature, music, and drama (Iyal, Isai, Nadagam) as his life's mission, Dr. B. Rubert Raghunathan, who wrote the PRAJAPATHI stage play over 25 years ago, is directing this feature film.


Director Dr. B. Rubert Raghunathan shares about PRAJAPATHI:

"PRAJAPATHI is not merely a film depicting a historical event. It is a divine mission that reveals God's love, grace, mercy, and the greatness of His salvation for all humanity."

PRAJAPATHI is a biblical motion picture that brings to life, on a grand cinematic scale, the birth, ministry, miracles, suffering, crucifixion, and glorious resurrection of Jesus Christ.


Based on the Holy Bible and created with world-class filmmaking technology, PRAJAPATHI is being produced with the vision of taking the Good News to the world—transcending languages, cultures, and generations.


A People's Movie – A Divine Mission Through Crowdfunding:


PRAJAPATHI is a people's film, being produced through Crowdfunding. With the vision of "From India to the Nations," PRAJAPATHI is being brought to life through a crowdfunding platform, inviting people from all walks of life to become partners in taking the message of Jesus Christ to the world.


It is noteworthy that the cast of PRAJAPATHI is not made up of professional actors and actresses selected from the film industry. Instead, they are dedicated artists who have faithfully served in the PRAJAPATHI drama for more than two and a half decades.

Every actor and actress has participated in this project with a spirit of sacrifice and wholehearted dedication.


Soon, PRAJAPATHI will begin its journey on the silver screen, carrying the message of Jesus Christ from India to the nations.

இயக்குநர் சீனு ராமசாமியின் 'ஒளிரும் வகுப்பறைகள்' நூலை மத்திய இணை

 *இயக்குநர் சீனு ராமசாமியின் 'ஒளிரும் வகுப்பறைகள்' நூலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெற்றுக் கொண்டார்; இந்திய மொழிகளில் வெளியிட உறுதி!*




மீ பதிப்பகம் சார்பில் மணிகண்டன் வெளியீட்டில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதியுள்ள ‘ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)’ எனும் புதிய நூலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.


நூலைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், இயக்குநரின் முந்தைய படைப்பான ‘சினிமாவின் ஆன்மா’ நூல் பெற்றது போன்றே, உலக சினிமா ரசனைக் கல்வியை மையமாகக் கொண்டுள்ள இந்த நூலையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு செல்வதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம் என்று உறுதியளித்து வாழ்த்தினார்.


நூலின் சிறப்பம்சங்கள்:

• நூல் தலைப்பு: ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)

• ஆசிரியர்: இயக்குநர் / கவிஞர் சீனு ராமசாமி

• வெளியீட்டாளர்: மீ பதிப்பகம் (மணிகண்டன்)

• நூல் பெற்றுக் கொண்டவர்: டாக்டர் எல். முருகன் (மத்திய இணை அமைச்சர்)


உலக சினிமா குறித்த ஆழமான பார்வையும், அதன் அழகியலையும் மாணவர்களும் சினிமா ஆர்வலர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் இலக்கிய மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netflix Unveils Pyaar Prema Kalyanam

 Netflix Unveils Pyaar Prema Kalyanam:*

A Modern Tamil Family Entertainer With a Delightful Role Reversal 27 July, 2026: 'Oodi poi kalyanam pannuradhu' ille na 'Kalyanam pannitu oodi poradhu' (trans.: should we run away to get married, or get married and then run away)? Meet the couple rewriting the rules of happily ever after! Pyaar Prema Kalyanam is here to flip the script on love, marriage, and everything that comes after "I do."  



Directed by and starring Elan in his acting debut, the film follows Pavi (Saanvee Meghana), a popular influencer who refuses to leave her family home after marriage. Instead, it's her husband, Elan, who moves in with her, setting off a hilarious chain of culture clashes, family chaos, shifting expectations, and heartfelt self-discovery. As the newlyweds navigate their unconventional arrangement, they soon realise that perhaps the biggest tradition worth challenging is the idea that everyone else gets to define their happily ever after. 


Marking Elan's acting debut, Pyaar Prema Kalyanam also showcases his signature storytelling – blending humour, emotion, and relatable family dynamics into a thoroughly entertaining watch. Backing him is a powerhouse ensemble featuring Radhika Sarathkumar, Yogi Babu, M. S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil, Maran and deepz Cyrus whose performances bring warmth and plenty of laughs to the story. 


Monika Shergill, Vice-President Content, Netflix India said,  "The most interesting love stories aren't the ones that follow the rules, they are the ones that dare to rewrite them. Pyaar Prema Kalyanam begins with a wonderfully simple but bold question: what if, after marriage, the groom moved into the bride's home instead? That single idea unfolds into a refreshingly funny, heartfelt and deeply relatable celebration of modern relationships, family and finding the courage to choose your own happily ever after.. Elan has brought a wonderfully fresh creative vision to the film, both as a director and in his acting debut, alongside a phenomenal ensemble cast that brings warmth, humour and authenticity to every moment. Following the strong response to Made in Korea, we are delighted to continue our collaboration with Sreenidhi Sagar and the team at Rise East Entertainment, and can't wait for audiences everywhere to discover this joyful family entertainer."


Producer Sreenidhi Sagar shares, "Following the incredible response to Made in Korea, which proved that authentic Tamil stories can resonate with audiences around the world, we were looking for another story with that same universal appeal. From the moment we heard this story, we knew it had the perfect blend of heart, humour, and relatability. What makes Pyaar Prema Kalyanam special is the way it explores modern relationship dynamics through a refreshing premise while remaining deeply rooted in family values and Tamil culture. It is a wholesome entertainer. At Rise East Entertainment, we are passionate about backing stories that feel both relevant and universal, and we're thrilled to partner with Netflix to bring this film to audiences across the world on August 21." Adding to the film's emotional resonance is a soulful soundtrack by Yuvan Shankar Raja, whose music beautifully complements its themes of love, family, individuality, and finding happiness on your own terms. 


Get ready for a romcom where the groom moves in, the bride stands her ground, and the biggest wedding surprise begins only after the wedding is over. ~ This August 21, witness a wedding that breaks every rule – except entertaining you on Netflix ~


https://www.instagram.com/reel/DbSOKDpqeMY/?igsh=MWhmem1zcXR6ajZlOQ

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

 *“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !*



“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?”

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.


இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.


சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.


இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் இளன், தனது வழக்கமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.


படத்தில் இளன்,  சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.


நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது ..


“மிகவும் சுவாரஸ்யமான காதல் கதைகள் என்பது விதிகளைப் பின்பற்றுபவை அல்ல; அவற்றைத் துணிச்சலாக மறுபடியும் எழுதுபவை. “பியார் பிரேமா கல்யாணம்” ஒரு எளிமையான ஆனால் துணிச்சலான கேள்வியுடன் தொடங்குகிறது: திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன ஆகும்? அந்த ஒரு சிந்தனையே, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும், புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையாக விரிகிறது.


இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகும் இளன், இந்தப் படத்திற்கு புதியதொரு படைப்பாற்றல்மிக்க பார்வையை கொண்டு வந்துள்ளார். அவருடன் இணைந்திருக்கும் அற்புதமான நட்சத்திரக் குழுவும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பையும் தந்து நம்மை ஈர்க்கின்றனர்.


Made in Korea திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் Rise East Entertainment குழுவுடன் எங்களது கூட்டணியைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த மகிழ்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டுகளிப்பதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”


படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்..,


”‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு கதையை தேடிக் கொண்டிருந்தபோது, ‘ பியார் பிரேமா கல்யாணம்’ எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”


படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார்.


திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் ‘ப்யார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

https://www.instagram.com/reel/DbSOKDpqeMY/?igsh=MWhmem1zcXR6ajZlOQ

Sunday, 26 July 2026

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்லவரும் ஆன்மீக திரைப்படம் " பிரஜாபதி "

 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்லவரும் ஆன்மீக திரைப்படம்   " பிரஜாபதி "


"பிரஜாபதி" இது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல !!


கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி, நாடக வடிவில் இந்தியா முழுவதும் அரங்கேறி, ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது. 


இன்று, அந்த மகத்தான ஆன்மீகப் பாரம்பரியம் உலகத் தரம் வாய்ந்த திரைப்படமாக உருவெடுத்து , இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் புதிய பயணத்தைத்   APF Production House தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறது.


இயல், இசை, நாடகம் ஆகிய கலை வடிவங்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் உயர்ந்த அழைப்பை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பே " பிரஜாபதி " நாடகத்தை இயற்றி அரங்கேற்றிய முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன்,  இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.


பிரஜாபதி படம் குறித்து இயக்குனர் முனைவர் B.ரூபர்ட்  பகிர்ந்தவை...


 "பிரஜாபதி" இது ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் சித்தரிக்கும் திரைப்படமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் தேவன் அருளிய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் மகத்துவத்தை  வெளிப்படுத்தும் ஒரு இறைப்பணியாகும்.


பிரஜாபதி என்பது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், அற்புதங்கள், பாடுகள், சிலுவை மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மாபெரும் திரை அனுபவமாக உயிர்ப்பிக்கும் விவிலியத் திரைப்படமாகும்.


வேதாகமத்தின் அடிப்படையில், உயர்தர திரைப்படத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் பிரஜாபதி, எல்லா மொழிகளையும், எல்லா கலாச்சாரங்களையும், எல்லா தலைமுறைகளையும் சென்றடையும் வகையில் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. 


பிரஜாபதி - மக்களின் திரைப்படம்: இது மக்கள் பங்களிப்பில் (Crowdfunding)  உருவாகும் ஒரு இறைப்பணி.  “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு”என்ற நோக்கத்தை நனவாக்கும் வகையில் பிரஜாபதி திரைப்படம் Crowd Funding தளத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.


பிரஜாபதி திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள், திரைப்படத் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முறை நடிகர், நடிகைகள் அல்லர். அவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஜாபதி நாடகத்தில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தியாக உணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இந்தப் படைப்பில் பங்கெடுத்துள்ளனர். 


விரைவில் பிரஜாபதி திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையில் அனைவரும் காண்பீர்கள் என்றார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’

 *நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ 




ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் 'கானா விளக்கு மயிலே...' மற்றும் 'அடி தேனி சந்தையில்...' ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.


இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் 'இடிமுழக்கம்' திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.


படத்தின் எனர்ஜிடிக்கான பாடலான ‘கானா விளக்கு மயிலே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மற்றொரு பாடலான 'அடி தேனி சந்தையில்...' பாடலை லா. வரதன் எழுதியிருக்க ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா பாடியுள்ளனர்.


’இடிமுழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். 


 இதை சோனி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது 


*நடிகர்கள்:* சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா, யோகிபாபு, பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


கதை, திரைக்கதை, இயக்கம்: சீனு ராமசாமி,

வசனம்: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சீனு ராமசாமி,

நடனம்: தினேஷ் மாஸ்டர் & பாபா பாஸ்கர்,

ஒளிப்பதிவு: அசோக் ராஜ் (ஒளிப்பதிவாளர் சுகுமார் உதவியாளர்),

படத்தொகுப்பு: சங்கத்தமிழன்

Saturday, 25 July 2026

SODAKU' Audio & Trailer Launch to Be Held in Malaysia*

 *’SODAKU' Audio & Trailer Launch to Be Held in Malaysia*









_*Lokesh Kanagaraj to Launch the Audio; Venkat Prabhu to Unveil the Trailer of Kamaraj Manonmani's Action Thriller*_


The audio and trailer of SODAKU, directed by Kamaraj Manonmani, are set to be launched at a grand event in Malaysia on Sunday, July 26, at the Batu Caves Shenga Convention Centre.


Acclaimed filmmaker and actor Lokesh Kanagaraj will officially launch the film's audio, while filmmaker-actor Venkat Prabhu will unveil the trailer. The event will also be attended by director Lingusamy, filmmaker Saran, who has penned the film's dialogues, and the film's lead cast including Natty, Vidaarth, Anandhi, Rakshitha, along with several cast and crewmembers. A number of distinguished Dato’ will grace the occasion as special guests.


*A Chennai–Malaysia Collaborative Production*


Presented by Masterpiece, SODAKU is an action thriller jointly produced by Deva Entertainments and Malaysian banner Jubilee Film Productions.


The title SODAKU draws inspiration from the familiar premise that life can change in the blink of an eye. The film explores exactly such a turning point, where a single fleeting moment alters the course of one's life forever. Built around a premise that audiences can easily relate to, the story promises an emotionally engaging and suspense-filled thrilling experience in the theaters. 


Sodaku, shot entirely in Malaysia, offers audiences a visually refreshing backdrop while presenting a gripping thriller.


Celebrated filmmaker Saran, known for directing blockbuster films such as Amarkalam, Gemini and Vasool Raja MBBS, has written the film's dialogues, while Kamaraj Manonmani has penned the story and screenplay besides directing the film.


At the heart of the narrative lies an intriguing question: What if we knew today what was going to happen tomorrow?The film explores how such knowledge could transform lives, create unexpected complications, and turn ordinary existence upside down. Built around this fascinating concept, SODAKU promises audiences a fresh screenplay structure and a riveting thriller experience.


Known for choosing distinctive scripts and carving successful careers as performance-driven lead actors, Natty and Vidaarth come together for the first time in SODAKU, making the film one of the most anticipated collaborations in recent times. The others in the star-cast include Kayal Anandhi, Rakshitha (of Saravanan Meenatchi fame), Dato Ganesan Arumugam, Abhishek Shankar, and several others in pivotal roles.


Having completed principal photography, the film is currently in the final stages of post-production.


*Technical Crew*


Presented by: Masterpiece


Production: Deva Entertainments & Jubilee Film Productions


Produced by: Muthukumar, Devha Arjhun & Dato Ganesan Arumugam


Story, Screenplay & Direction: Kamaraj Manonmani


Dialogue: Director Saran


Music: Abhishek A.R. (National Award winner for a short film music composition competition)
Director of Photography: N.S. Uthayakumar (Kurangu Bommai)


Editor: G. Ramarao


Stunt: 'Vin' Veera


Executive Producer: K.S. Mayilvaganan



மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு!

 மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ - டிரைலர் வெளியீடு!








ஆடியோவை டைரக்டர்,நடிகர் லோகேஷ் கனகராஜ் வெளியிட,

டிரைலரை டைரக்டர்,நடிகர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். 

இப்படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார்.


மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் இடம் பெறும் நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்‌ஷிதா மற்றும் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள். 


சென்னை - மலேசியா கூட்டு முயற்சி!

நட்டி - விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!

இயக்குநர் சரண் வசனத்தில் புது இயக்குநர் 

காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் அதிரடி திரில்லர் படம் !


 தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் 

மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில், 

அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள். 


‘சொடக்கு’ போடற நேரத்துல எல்லாம் மாறிப்போச்சு.. வாழ்க்கையே தலை கீழாக ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க. 

அப்படி ஒரு சொடக்கு போடுற நேரத்துல என்னென்ன நடந்தது என்பது தான் இக்கதை. நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும். இக்கதை நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும். 


தமிழ் திரைப்படமான இதன் படபிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.

‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா MBBS’

போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண், இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். 

கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி. 


நாளை நடப்பது  இன்றைக்கே நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்!!

சுவாரசியமான இந்த நிகழ்வால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.. குழப்பங்கள் என்பது இயல்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது..  எப்படி எதிர்கொள்வது என்பதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பாக

ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.


வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, கதை நாயகர்களாக ரசிகர்களை தனித்தனியாக குஷி படுத்தி வரும் நாயகர்கள் நட்டி, விதார்த். 

இவர்கள் இணைந்து #சொடக்கு படத்தில் நடிப்பதால்,

ரசிகர்கள் எதிப்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இவர்களுடன்,

கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா (சரவணன் மீனாட்சி புகழ்), மலேசியா ரஜினிகாந்த் dato கணேசன், அபிஷேக் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


படபிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது


Editing: G.Ramarao, 

DOP: N.S.Uthayakumar (குரங்கு பொம்மை),

Stunt: ‘Vin’ Veera,

Executive Producer: K.S.Mayilvaganan 


Music: Abhishek.A.R  Introdection ( குறும்படங்களுக்கான இசையமைப்பு போட்டியில் தேசிய விருது பெற்றவர் ). 


Presents: Masterpiece 


Production: Deva Entertainments & Jubilee Film Productions


Produced By: Muthukumar, Devha Arjhun & 

Dato Ganesan Arumugam


Title: “SODAKU” 


Dialogue: Director Saran, 

Story,Screenplay & Direction: Kamaraj Manonmani.