Featured post

BIGG BOSS TAMIL SEASON 10 GRAND LAUNCH ON SEPTEMBER 6 FROM 6 PM ON JIOHOTSTAR AND STAR VIJAY

https://www.instagram.com/reel/DcWCHN0x3hB/?igsi=cGptcmw0dWY1bHo1 **BIGG BOSS TAMIL SEASON 10 GRAND LAUNCH ON SEPTEMBER 6 FROM 6 PM ON JIOHO...

Wednesday, 19 August 2026

பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”:

 *“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!*

சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா மற்றும் அவரது மகளின் உணர்வுப்பூர்வமான பயணத்தை ’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 வெளியாகிறது.

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 21, 2026) திரையரங்குகளில் வெளியாகிறது.


படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “‘இருமுடி கட்டு’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சிவா நிர்வாணா எங்களிடம் இந்த உணர்வுப்பூர்வமான கதையை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்துவிட்டது. தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உறவை பார்வையாளர்கள் நிச்சயம் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அதிலிருந்து விரியும் கதை, மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத ஒரு உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். ரவிதேஜா சார் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதுபோன்ற வித்தியாசமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. 


சிவா நிர்வாணா உணர்வுப்பூர்வமான கதையை கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. நாளை திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார். 


ரவி தேஜா மற்றும் சிவா நிர்வாணா முதன்முறையாக இணையும் இந்தத் திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர் காவேரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“A Story of Family, Emotion and Transformation That Will Entertain & Touch Every Heart”: Mythri Movie Makers on ‘Irumudi Kattu’

 *“A Story of Family, Emotion and Transformation  That Will Entertain & Touch Every Heart”: Mythri Movie Makers on ‘Irumudi Kattu’*

_*Producers Naveen Yerneni and Y. Ravi Shankar look forward to audiences embracing the emotional journey of Ravi Teja and his daughter; the Shiva Nirvana directorial releases worldwide on August 21.*_

At its heart, ‘Irumudi Kattu’ is a story rooted in family, relationships and the powerful bond between a father and his daughter. Directed by Shiva Nirvana, the film presents Mass Maharaja Ravi Teja in a distinctly different emotional space, taking audiences through a journey of pain, faith and transformation. Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under Mythri Movie Makers and presented by T-Series Films, Irumudi Kattu is all set for its worldwide theatrical release on , August 21, 2026.


Speaking about the film and its release, producers Naveen Yerneni and Y. Ravi Shankar say:“We are extremely happy that ‘Irumudi Kattu’ is reaching audiences tomorrow. From the moment Shiva Nirvana narrated the story to us, what stayed with us was its emotional core. The relationship between a father and his daughter gives the film a very relatable foundation, while the journey that unfolds from there takes the story into a much larger and unexpected space. We strongly believe audiences will connect with these emotions.” Ravi Teja sir has delivered a very special performance and it has been wonderful to see him explore such a different emotional space. Shiva has handled the story with great sensitivity, while Priya Bhavani Shankar, Baby Nakshathra and the entire cast have brought tremendous sincerity to their characters. G. V. Prakash Kumar’s music has also added immense value to the film, and we are delighted with the response to ‘Irumudi Kattu’. We sincerely thank the entire team for their commitment and hard work, and we look forward to audiences experiencing the film in theatres on August 21,2026.”

The film stars Priya Bhavani Shankar as Kaveri and Baby Nakshathra in a pivotal role, alongside Sai Kumar, Ajay Ghosh, Ramesh Indira and Swasika. Shiva Nirvana has written and directed the film, with G. V. Prakash Kumarcomposing the music, Vishnu Sharma handling cinematography, Prawin Pudi serving as editor and Sahi Suresh as Production Designer.


Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under the banner of Mythri Movie Makers and presented by T-Series Films, Irumudi Kattu brings together Ravi Teja, Priya Bhavani Shankar and Shiva Nirvana in an emotionally driven theatrical experience centred on family, relationships and transformation. The film is all set to meet audiences worldwide in cinemas on August 21, 2026.

அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய

 " அமரம் '' கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும்  கதை இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா !














































" அமரம் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!



திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்

 " அமரன் ".


மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.


கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்  தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது..,


‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில், ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது.


இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடைய உழைப்பினால்தான் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.


இந்தப் படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் என்னிடம் கூறியவுடனேயே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.


ஒரு கட்டத்தில் என்னால் படத்தில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டபோது, துரை பாண்டி இந்தப் படத்தின் பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். கதாநாயகன் தேஜஸ் ராஜன் மற்றும் கதாநாயகி ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘அமரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும். நன்றி!”


 நாயகன் தேஜஸ் ராஜன் பேசியதாவது..


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்களுடைய படைப்பு தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளது. படத்தின் டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.


இந்தத் திரைப்படத்தை நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு செய்தோம். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணிக்கும், எண்ணூர் பீச்சிலும் என பல்வேறு இடங்களில் பல கஷ்டங்களுக்கிடையே இந்தப் படத்தை படமாக்கினோம்.


இந்தப் படத்திற்காக 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இயக்குநர் அருள் கிருஷ்ணன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தின் வெற்றி விழாவில் என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறேன். இப்படத்திற்கு உங்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி!”


படத்தின் இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதாவது..,


“என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம்.


அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.


பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே’ என்று கூறினார்.


கதாநாயகர்கள என்னால போய் ரீச் பண்ண முடியல, காரணம் அவங்களுக்கு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு. அப்போ நடிகர் கார்த்தி சார் ஒரு இன்டர்வியூல சொன்ன மாதிரி, அத ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு நம்மளே நம்மள முதல்ல வெளி கொண்டு வரணும். அவங்கள மாதிரி ஒரு நடிகருக்கு எழுதுன கதையிலயும், நல்ல கதையா, நல்ல திரைக்கதையா இருக்குற பட்சத்துல, ஒரு புதுமுக நடிகர கூட போட்டு அந்த அளவுக்கு ஒரு ஹிட்ட குடுக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு படத்த எடுத்துற முடியும். ஒரு குறைந்த முதலீட்டுலயே, குறைந்த பட்ஜெட்லயே ஒரு  பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும்னா  அதுக்கான ஒரு பெரிய முயற்சிதான், ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம், அதுக்கு நெறைய திட்டமிடல் தான் காரணம்.


(Trident Arts) ரவீந்திரன் சார் அவங்க வந்து இந்தப் படத்த பத்தி சொல்லும்போது, ஒரு 'புதிய பாதை', ஒரு 'சுப்பிரமணியபுரம்', ஒரு 'பருத்திவீரன்' மாதிரி வரும்னு சொன்னாரு. கல்ட் கிளாசிக்கா (Cult classic) இந்தப் படம் வரும்.


இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது.


இந்திய சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரை படத்திற்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது. நடிகர் யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பர். ‘ஜுங்கா’ படத்திலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தபோது, அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. சினிமா சூழல் அப்படித்தான் இருக்கிறது.


இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக பலரும் தங்களுடைய சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காமல், எனக்காகவும் இந்தப் படத்திற்காகவும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். இப்போதைக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நாயகி ஐரா அகர்வால் பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். இந்த நாளுக்காக நான் பல மாதங்களாக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். தற்போது எங்களுடைய படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”


படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் தன்னிடம் கூறியபோதே மிகவும் பிடித்திருந்தது ஐரா அகர்வால், அவர் கூறிய விதத்தில் கதையை சிறப்பாக திரையில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.


“இயக்குநர் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து, மிகவும் அழகாக என்னை நடிக்க வைத்தார். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படத்தில் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்”.


என்னுடன் இணைந்து நடித்த கதாநாயகன் தேஜஸ் ராஜனுக்கும் நன்றி, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றி.“‘அமரம்’ திரைப்படம் நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். எனவே இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் அளிக்க வேண்டும்” நன்றி.


சிறப்பு விருந்தினர் மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ் பேசியதாவது..,


“மக்களுக்காக பேசும் மீடியா துறை நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அமரம்’ படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை, அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படமாக இப்படம் இருக்கும் என்று அறிகிறேன். இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துச் சென்று உருவாக்கியிருக்கும் படக்குழுவினருக்கும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


லோக் ஆயுக்தா பற்றிய ஒரு விழிப்புணர்வு தமிழகத்தில் இன்னும் போதுமான அளவில் இல்லை. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைப்பான லோக் ஆயுக்தா குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்க வேண்டும். அந்தப் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது. அதற்கான பயணத்தில் நாம் அனைவரும் இணைவோம் என்று இந்த விழாவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.


‘அமரம்’ திரைப்படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அளிக்க வேண்டும். மக்களின் குரலைப் பேசும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். படக்குழுவினருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!”


மிராக்கிள் மைக்கேல்  புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.


தொழில் நுட்ப குழு விபரம்


எழுத்து இயக்கம் -  அருள் கிருஷ்ணன்

இசை - மிக்கி ஜெ .மேயர்

பாடல்கள் - சினேகன்,சௌந்தரராஜன். K

ஒளிப்பதிவு - பரத் குமார்

எடிட்டிங் - R. ஸ்ரீராமர்

கலை இயக்கம் - ஜனார்த்தனன்

ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்

நடனம் - பூபதி

தயாரிப்பு மேற்பார்வை - A.P.ரவி

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்

தயாரிப்பு - C.R.ராஜன்.


Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை இம்மாதம் 28ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்'

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு !*



சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 


இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், 


'' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.‌ திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன். இணைய தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்த முறை மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.‌


இந்தப் படத்தில் நானும், அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம். 


சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி வி பிரகாஷ் குமாருக்கு தான். 2003 ஆம் ஆண்டில் அவர் 'வெயில்' படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, 'உருகுதே மருகுதே' பாடலை போட்டுக் காண்பித்து இந்தப் பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.ஜி வி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான். தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக் கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும் , நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தான்.  எனக்கு இந்த திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி. 


ஜி.வி. பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச் சிறந்த மனிதநேய பண்பாளர் தான் வெங்கி அட்லூரி.  நீங்கள் பார்த்து ரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்-  வெங்கியுடைய ஆர்ட் அல்ல.... ஹார்ட்.‌ இந்த படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்து விட்டேன். வாசிக்கும் போதே பல இடங்களில் கண்கலங்கினேன். அதை அப்படியே திரையில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி. 


சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த - இயங்கிய லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு... என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்கு காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.


படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்கு சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் 'சூர்யா'  போன்ற மாபெரும்  நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், 


'' மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி. 


சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, 'மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்' என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது. 


இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் - மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாதவை. அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. 


இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால்  ரசிகர்களை அன்பாலும் ... பாசத்தாலும்... ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்... பேசும் போதும்... பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், 'இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?' என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.


அதன் பிறகு இயக்குநரிடம் 'இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்... இந்த படம் ஓடாது' என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் 'டியூட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமீதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் சார் மிகத் திறமையான பெண், நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி மமீதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம் . அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம். ..!அப்படி செய்திருக்கலாம் .. !என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் 'ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது' என்றார். 


இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி... அடுத்த உறவுகளை நோக்கிய  அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன். அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது. 


கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார். 


சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.


ஜிவி பிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த திரைப்படம் 'அவன் அவள் அது' என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன். இதைப்போல் இந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளை தூண்டி இருக்கிறது. 


ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது 'சூரியவம்சம்'. அது அந்த காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் '' என்றார். 


நடிகை மமீதா பைஜூ பேசுகையில், 


'' விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சார்யை மிஸ் செய்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 


இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்'' என்றார். 


இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,


 '' இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.


அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரி - க்கு அவருடன் 'வாத்தி' படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது .அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று,  ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.


'வாத்தி' திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம். 


தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னை சந்தித்த அனைவரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை பிரமாதம் என பாராட்டினர்.  அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது.. உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன். 


இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது. 


சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன். 


படப்பிடிப்பு தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடி வாங்கி இருக்கிறேன். அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். சூர்யாவை போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர்களுடைய நடிப்பில் 'தாய்க்கிழவி' மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமும் வெற்றி. இந்த படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன். 


இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். 


இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை. '' என்றார். 


இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன். 


இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி. 


மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். 


ஜி வி பிரகாஷ் குமாருடன் 'வாத்தி' படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, 'உங்களை...சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?' என கேட்டேன். 'ப்ரோ' என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்... சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.


'தி‌ ஒன்'  சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது. 


இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது. 


சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.


திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்... படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்.... நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்'' என்றார்.

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை

 *பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி*









தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது.


பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.


விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை வென்று மீண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற்ற அவர்களின் தைரியம், மன உறுதி மற்றும் நம்பிக்கையைப் போற்றும் வகையில் இந்த கௌரவிப்பு நடைபெற்றது.


குடும்பங்களுக்கான புற்றுநோய் சிகிச்சைச் செலவைக் குறைக்கும் முயற்சி


புற்றுநோய் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும். புற்றுநோய் கண்டறியப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்துடன், மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், மருந்துகள், கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளும் குடும்பங்களுக்கு பெரும் சவாலாக அமைகின்றன.


குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த நிதிச்சுமை சிகிச்சையைத் தாமதப்படுத்தவோ அல்லது இடையில் நிறுத்தவோ காரணமாக விடக்கூடும் என்பதை உணர்ந்து, நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் வழங்கும் நோக்கில் ஜஸ்’ ஆன்கோ செயல்பட்டு வருகிறது.


அமைப்பின் நோக்கம் எளிமையானது:


“தரமான புற்றுநோய் சிகிச்சை. குறைந்த செலவில். இனி இன்னும் எளிதாக அணுகலாம்.”


பூந்தமல்லி மையத்தின் மூலம் பூந்தமல்லி, குமணஞ்சாவடி, போரூர், ஆவடி, திருமழிசை, மாங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதுடன், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சிரமத்தையும் குறைக்க ஜஸ்’ ஆன்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது.


புற்றுநோய் விழிப்புணர்வு, மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் ஆரம்பகால கண்டறிதல்


திறப்பு விழா நிகழ்ச்சியில் புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வயது, உடல்நல ஆபத்து காரணிகள் மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கமான மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் தேவையான புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும், உடலில் தொடர்ந்து காணப்படும் அல்லது வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.


சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்வது, சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.


நிபுணத்துவமான சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு சேர்த்தல்


பல புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பலமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீண்ட தூரப் பயணம் ஏற்கனவே சவாலான புற்றுநோய் சிகிச்சைப் பயணத்தில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியான கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும்.


இதனால், பூந்தமல்லியில் புதிய மையத்தைத் தொடங்கியிருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கான புவியியல் ரீதியான அணுகலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைப் பயணத்தை மேலும் வசதியானதாகவும், எளிதாக அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவிலானதாகவும் மாற்றும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.


பூந்தமல்லி மையம், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களைத் தொடர்ந்து, ஜஸ்’ ஆன்கோவின் நான்காவது மையமாக இணைகிறது.


மேலும், ஜஸ்’ ஆன்கோ தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் OMR மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் புதிய மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல சமூகங்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடியதாக மாற்றுவதே நிறுவனத்தின் நீண்டகால நோக்கமாகும்.


சிகிச்சையைத் தாண்டிய அர்ப்பணிப்பு


புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் சிகிச்சையில் இருந்து மட்டும் தொடங்குவதில்லை; விழிப்புணர்வு, தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல் ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது என்று ஜஸ்’ ஆன்கோ நம்புகிறது.


தனது விரிவடைந்து வரும் மையங்களின் மூலம், நோயாளிகள் நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையைப் பெறுவதற்கு தூரமும், பொருளாதாரச் சுமையும் முக்கிய தடைகளாக இருக்காத ஒரு சுகாதாரச் சூழலை உருவாக்குவதில் பங்களிக்க ஜஸ்’ ஆன்கோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


ஜஸ்’ ஆன்கோவின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறுகையில்:


“புற்றுநோய் என்பது ஏற்கனவே ஒரு குடும்பத்திற்கு உணர்வுபூர்வமாகவும் சவாலாகவும் இருக்கும் ஒரு பயணம். அந்தப் பயணத்தை நிதிச்சுமையும், நீண்ட தூரமும் மேலும் கடினமாக்கக் கூடாது. மக்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அருகில் கொண்டு செல்வதும், அதை மேலும் குறைந்த செலவில் வழங்குவதும் ஜஸ்’ ஆன்கோவின் நோக்கம்.


இதன் மூலம் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற்று, நம்பிக்கையுடன் தங்களது சிகிச்சையைத் தொடர முடியும்.”


ஜஸ்’ ஆன்கோ பற்றி


ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco) என்பது நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை அமைப்பாகும்.


தொடர்ந்து விரிவடைந்து வரும் தனது சிகிச்சை மையங்களின் மூலம், சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பதில் ஜஸ்’ ஆன்கோ கவனம் செலுத்துகிறது. அணுகல் மற்றும் குறைந்த செலவு ஆகியவை அதன் செயல்பாட்டின் முக்கிய அடிப்படைகளாக உள்ளன.