Featured post

One Man Movie Review

One Man Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம one man படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது, produce ப...

Friday, 21 August 2026

Modha Rathiri Movie Review

Modha Rathiri Tamil Movie Review 

ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம மொத ராத்திரி படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன், ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், அப்துல் லீ, வர்ஷினி கார்மேகம் னு பலர் நடித்திருக்காங்க. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கி இருக்காரு. முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிறதோட, இந்த படத்துல இயக்குநர் ராஜா கருப்பசாமியும் நடித்திருக்காரு.



இந்த படத்தோட கதையைப் பொறுத்தவரைக்கும், மருதநாயகம் கதாபாத்திரத்துல ரிஷிகாந்த் நடிச்சிருக்காரு. காதலியை இழந்ததுக்கப்புறம் அந்த வலியில இருந்து வெளிய வர முடியாம துபாய்ல கிட்டத்தட்ட ஆறு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரோட சகோதரி மகனுக்கு காதுகுத்து விழா நடக்குறதால சொந்த ஊருக்கு வரச் சொல்லி குடும்பத்துல இருந்து அழைக்கிறாங்க. ஆனா அவர் ஊருக்கு வர்றது காதுகுத்துக்காக மட்டும்தான் நினைச்சுட்டு இருக்காரு. ஆனால் குடும்பத்தினர் அவருக்கு தெரியாம ஒரு பெரிய விஷயத்துக்கு திட்டம் போட்டிருக்காங்க.


மருதநாயகத்துக்கு திருமணம் செய்ய முடிவு பண்ணி, மண்டபத்துல முத்துச்செல்வி என்ற பெண்ணை மணமகளா தயாரா வச்சிருக்காங்க. முத்துச்செல்வி கதாபாத்திரத்துல அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்காங்க. இன்னொரு பக்கம், முத்துச்செல்விக்கும் இந்த திருமணத்துல கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. ஏன்னா அவங்க ஏற்கனவே வேற ஒருத்தரை காதலிச்சுட்டு இருக்காங்க. அம்மாவுக்கு பயந்துதான் திருமண மண்டபத்துக்கு வந்திருக்காங்க.


திருமணத்துல இருந்து காதலனுடன் தப்பிச்சு போகணும்னு முத்துச்செல்வி plan பண்ணுறாங்க. ஆனா அவங்க காதலன் சரியான நேரத்துக்கு வந்து அவங்களை கூட்டிட்டு போக முடியாம போயிடுது. இதனால எதிர்பாராத விதமா மருதநாயகத்துக்கும் முத்துச்செல்விக்கும் திருமணம் நடந்து முடிஞ்சிடுது.


இப்போ திருமணம் முடிஞ்சாச்சு, அடுத்தது என்னன்னு நினைக்கும்போதுதான் கதையோட முக்கியமான twist வருது. முத்துச்செல்வியோட காதலன், “மொத ராத்திரிக்கு முன்னாடியே உன்னை கூட்டிட்டு போயிடுறேன்”னு சொல்லி வர்றாரு. அவர் உண்மையாவே வந்து முத்துச்செல்வியை கூட்டிட்டு போனாரா? இல்ல இந்த திருமணம் அவங்களோட வாழ்க்கையையே மாற்றிடுச்சா? ஒரே இரவுல நடக்குற இந்த சம்பவங்கள்தான் படத்தோட முக்கியமான கதை.


இந்த படத்தோட biggest plus என்னன்னா, ஒரு திருமணத்தை மட்டும் மையமா வச்சுக்கிட்டு பல social issues-ஐ இயக்குநர் உள்ளே கொண்டு வந்திருக்காரு. பெண்ணோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காம அவங்களை கட்டுப்படுத்துற சமூக மனநிலை, திருமணம் என்பது பணம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல, அதுக்கு தைரியமும் முக்கியம், காதல் மட்டுமே வாழ்க்கை கிடையாது னு பல விஷயங்களை இயல்பான சம்பவங்கள் மூலமா சொல்லியிருக்காங்க.


அதோட சாதி ஏற்றத்தாழ்வு, ஆணவக் கொலைகள், குடும்பத்துக்குள்ள இருக்குற கருத்து வேறுபாடுகள், திருமண வீட்டுல நடக்குற சின்ன சின்ன சண்டைகள், வெளியில சிரிச்சு பேசுறவங்களுக்குள்ள இருக்குற உண்மையான எண்ணங்கள் என நிறைய விஷயங்களை ஒரே கதைக்குள்ள கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் preach பண்ணுற மாதிரி இல்லாம, கதையோட போக்குலயே வர்றது நல்லா இருக்கு.


படத்தோட presentation-லயும் சில interesting விஷயங்கள் இருக்கு. குறிப்பா title போடுற விதத்துல இருந்து director name காட்டுறது வரைக்கும் பழைய காலத்து தமிழ் சினிமா feel கொடுக்குற மாதிரி சில விஷயங்களை ரசிக்கும்படி அமைச்சிருக்காங்க. ஆரம்பத்துலயே சிறு தெய்வ வழிபாடு மூலமா ஆணவக் கொலைகள் பற்றிய ஒரு strong idea-வை establish பண்ணுறாங்க. சாமி வந்து ஆடினாலும், சில சமூக விஷயங்களை மக்கள் எவ்வளவு எளிதா ஏத்துக்க மாட்டாங்கன்னு காட்டிய விதமும் கவனிக்க வைக்குது.


கதை முழுக்க ஒரே இரவுல நடக்குறதால ஆரம்பத்துல இருந்தே ஒரு urgency இருக்கு. அடுத்து என்ன நடக்கும், யாரு என்ன முடிவு எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னு curiosity தொடர்ந்து இருக்கு. அதனால படம் நல்ல பரபரப்போட நகருது. இயக்குநர் கதைக்குள்ள சின்ன சின்ன messages-ஐ வச்சிருக்குற விதமும் நல்லா work ஆகுது.


படத்தோட second half-ல கொஞ்சம் slow ஆகுற feel வந்தாலும், overall ஆ கதையோட core நல்லா இருக்கு. மழை சம்பந்தப்பட்ட காட்சிகள்ல சில இடங்கள்ல கதையோட வேகம் கொஞ்சம் குறைஞ்சாலும், அதுவும் கதாபாத்திரங்களோட சூழ்நிலையை இன்னும் intense ஆ காட்டுற மாதிரி அமைந்திருக்குது. இன்னும் கொஞ்சம் crisp ஆ இருந்திருந்தா இன்னும் engaging-ஆ இருந்திருக்கும்.


Performance-ஐ பத்தி பாத்தோம்னா ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ரெண்டு பேரும் தங்களோட characters-ஐ நல்லா carry பண்ணிருக்காங்க. குறிப்பா திருமணம் நடக்கப்போறதே தெரியாம வந்து மாட்டிக்கிற மருதநாயகத்தோட confusion, அதே நேரத்துல தன்னோட காதலை காப்பாத்த போராடுற முத்துச்செல்வியோட emotions எல்லாமே நல்லா வெளிப்படுது. Supporting characters-ம் கதைக்கு தேவையான support கொடுத்திருக்காங்க.


மொத்தத்துல பார்த்தா, மொத ராத்திரி ஒரு திருமணத்தை மையமா வைத்து family, love, சமூக பிரச்சனைகள், emotions, comedy மற்றும் unexpected situations-ஐ கலந்து கொடுத்திருக்குற ஒரு நல்ல entertaining படம். ஒரே இரவில் நடக்குற கதை என்பதால் suspense மற்றும் curiosity கடைசி வரை maintain ஆகுது.


சோ இந்த வாரம் family-யோட சேர்ந்து theatre-ல ஒரு different ஆன தமிழ் படத்தை பார்க்கணும்னு நினைக்கிறவங்க, தாராளமா மொத ராத்திரி படத்தை try பண்ணலாம். கண்டிப்பா ஒரு நல்ல theatrical experience கொடுக்கக்கூடிய படமா இது இருக்கும்!

No comments:

Post a Comment