Featured post

VELAMMAL NEXUS FELICITATES ASIAN GAMES MEDALLIST MS. VITHYA RAMRAJ AND HER COACH SHRI. NEHPAL SINGH

 VELAMMAL NEXUS FELICITATES ASIAN GAMES MEDALLIST MS. VITHYA RAMRAJ AND HER COACH SHRI. NEHPAL SINGH Velammal Nexus proudly felicitated reno...

Monday, 24 August 2026

சிட்டுக்குறிஞ்சி'* முதல் பாடல் *குறிஞ்சி மலை மேல* 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

 *'சிட்டுக்குறிஞ்சி'* முதல் பாடல் *குறிஞ்சி மலை மேல* 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!








வரும் நாட்களில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான *சிட்டுக்குறிஞ்சி* படத்தின் முதல் பாடலான *குறிஞ்சி மலை மேல* பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


உற்சாகம் நிறைந்த திருமணப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். பாடலுக்கு கு. கார்த்திக் வரிகள் எழுதியுள்ள நிலையில், அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார்.


பிளாக் அண்ட் ஒய்ட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் *சிட்டுக்குறிஞ்சி*, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகி வருவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள *சிட்டுக்குறிஞ்சி*, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா மற்றும் நக்ஷா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


*சிட்டுக்குறிஞ்சி* படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, 1983-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட காலகட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தின் வாழ்வியலையும் சூழலையும் தத்ரூபமாகக் கொண்டுவருவதற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


மேலும், படத்தின் இசை அனுபவத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், பின்னணி இசைக்கான பதிவுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் அமைந்துள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன


*சிட்டுக்குறிஞ்சி* மூலம் இசையமைப்பாளராக மாறா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ . ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ராம்ஜி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


இப்படத்தை டி. ஜூட் ஆனந்த் தயாரிக்கிறார். ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்) மற்றும் கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.


*நட்சத்திரப் பட்டாளம்*


ரஜித் மேனன்,

ஸ்ரீராம் கார்த்திக் – சிறப்பு தோற்றம்,

தீப்ஷிகா,

நக்ஷா சரண்,

வீ.ஜே. பப்பு,

ஜி. எம். குமார்,

எல். வி. ஆதவன்,

ராம்ஸ்,

ஹலோ கந்தசாமி,

தேனி முருகன்,

சுஜாதா,

கராத்தே ராஜா,

ஈஸ்வர்பாபு,

மஞ்சு,

அட்வகேட் பாபு.


*தொழில்நுட்பக் குழு*


எழுத்து & இயக்கம்: வீஜெ மீனாட்சி சுந்தரம்

தயாரிப்பு: டி. ஜூட் ஆனந்த்

இசை: மாறா

ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ

படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்

கலை இயக்கம்: ராம்ஜி

நடன இயக்கம்: தீனா

ஒலி வடிவமைப்பு: டோனி ஜே

SFX: கிஷோர் காமராஜ்

VFX: ஜீவரத்தினம் ஆர்.

ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தனி

காஸ்ட்யூமர்: எஸ். பி. சுகுமார்

மேக்கப்: வேல்முருகன்

விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்

இணை தயாரிப்பாளர்கள்: ராஜேஷ் ஆர்., டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்), கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர்

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மென்ட்ஸ்)

மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அஹ்மத், பாரஸ் ரியாஸ்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ. எஸ். பக்தீஸ்வரன், ஆர். ஜெ. முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்

ஆடியோ உரிமை: Saregama India Ltd. (RPSG Group)


*'குறிஞ்சி மலை மேல'* பாடல் 15 லட்சம் பார்வைகளை கடந்து, இசை ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், படத்தின் இசையும், வித்தியாசமான கதைக்களமும் *'சிட்டுக்குறிஞ்சி'* படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


*'சிட்டுக்குறிஞ்சி'* திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment