Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Monday, 13 January 2020

விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன்

பார்' படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட  'வாழ்க விவசாயி' படம்!

ரஜினியுடம் மோத விரும்பாத அப்புக்குட்டி!

விவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் 'வாழ்க விவசாயி'.

 அப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். 'வழக்கு எண்' முத்துராமன், 'ஹலோ' கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் 'பால்டிப்போ' கே.கதிரேசன் தயாரித்துள்ளார்.

 இப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.


படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

"எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் .  ,'வல்லவனுக்கு வல்லவன்', 'பூம் பூம் காளை',  'வைரி', 'ரூட்டு'.'மாயநதி' ,' குஸ்கா' 'இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு' , 'பரமகுரு' , 'கல்தா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே  இருக்கிறேன். நான் நடித்து 'வாழ்க விவசாயி', வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது  மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப்  பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.

தை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் 'தர்பார்'  போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி  பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும்  சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி    மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

 சாகுபடி செய்யும் போது  ஒரு விவசாயி புயல், காற்று , கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l   

இப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற  ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல்  இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.

படம் பற்றி நடிகர் அப்புக்குட்டி  கூறும்போது " ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து  சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா?

 ' தர்பார்' போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம்  சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள 'தர்பார்' வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே  இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .
 








 

நாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால்  நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு  நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம்  பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.

விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம்.  இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும்  இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.

படத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .

 குறிப்பாக, ’அம்மாடி அம்மாடி  நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன்  பாசம் ...
வெள்ளாம எல்லாமே தண்ணீரிலே  ..."என் எல்லாமே உன் கண்ணீரிலே...’
என்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி..!
 
’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்

No comments:

Post a Comment