Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Wednesday, 8 January 2020

“தர்பார்” திரைப்படத்துடன் வெளியிடப்படும்

“தர்பார்” திரைப்படத்துடன் வெளியிடப்படும்
“சைக்கோ” பட டிரெய்லர் ! 

உணர்வை நம்முள் கடத்தும்,  ஆத்மாவை உள்ளிழுத்து கொள்ளும் பாடல்களில் மெலடிக்கு எப்போதும் முதல் இடம் இருக்கும். இப்போது இணையம் முழுதும், யூடுயூப் முதற்கொண்டு சைக்கோ படத்தின் “நீங்க முடியுமா” பாடல் தான் எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான “உன்ன நினைச்சு” பாடல் ரசிகர்களின் விருப்பங்களை அள்ளிய நிலையில், இப்போது சித் ஶ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் உயிரை உருக்கும் இந்த மெலோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது....

பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி விட்டது. சிம்பொனி இசைத்துணுக்குகள் கேட்டு மயங்கிப்போனேன் அதிலும் அதில் வரும் வயலின் இசை என்னை அடிமையாக்கிவிட்டது. சித் ஶ்ரீராமின் குரல் இப்பாடலுக்கு பெரும்பலம் தந்திருக்கிறது. மேலும் இப்பாடலுக்கு வரிகள் தந்திருக்கும் கபிலன் வைரமுத்து வெகு திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாடலில் வரும் “நீ தெய்வம் தேடும் சிலையோ” எனும் ஒரு வரி போதும் அவரது மேதமைக்கு சான்று கூற. இப்பாடல் விஷுவலாக இன்னும் பல படிகள் மேலே இருக்கும்.  உணர்வின் உன்னத நிலைக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் என்பது உறுதி என்றார்.

ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இன்று 08.01.2020 உதயநிதி ஸ்டாலின் “சைக்கோ” படத்தின் டிரெய்லரை இணையத்தில் வெளியிடுகிறார்.
மேலும் எங்கள் மொத்த படக்குழுவும்  உற்சாகம் கொள்ளும் வகையில்  “தர்பார்” படத்தின் திரையிடலோடு “சைக்கோ” படத்தின் இதே டிரெய்லரும்  இணைந்து வெளியாகிறது. பாடல், டீஸர் என ரசிகர்கள் “சைக்கோ” படத்தின் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகிறார்கள்.  வரும் 2020  ஜனவரி 24 அன்று “சைக்கோ” படத்தை திரைக்கு கொண்டுவருகிறோம்  ரசிகர்கள் நிச்சயம் படத்தையும் கொண்டாடுவார்கள் என்றார்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளார்கள். 2020 ஜனவரி 24 அன்று படம்  வெளியாகிறது.


No comments:

Post a Comment