Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 10 January 2020

Madai Thirandhu press release of Srinivas & Vijay Prakash

Madai Thirandhu press release of Srinivas & Vijay Prakash

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020, சனிக்கிழமை அன்று ‘கோர்ட்யார்ட்’, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னையில் நடைபெறுகிறது.






 

‘மடை திறந்து’ என்பது 'NOISE AND GRAINS' நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற 12 இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு தொடராகும். உங்களுக்கு பிடித்த பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவையான, சுவராஸ்யமான சம்பவங்களை உங்களுக்கு பிடித்த பாடகர்களே பகிர்ந்துக் கொள்வார்கள் என்பது இந்த இசை நிகழ்ச்சி தொடரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

 












‘NOISE AND GRAINS’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, 





அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தியவரும் பெருமைக்குரியது. பிப்ரவரி மற்றும் மார்ச் 2020 இல் பாடகர் சித் ஸ்ரீராமுடன் ஒரு தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தையும் நடத்தவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் முன்னணி பாடகர் ஹரிஹரன் இரண்டாவது அத்தியாயத்தில் பங்கேற்றார்.

“இருவர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தென்னிந்தியாவின் முக்கிய பாடகர்கள், சீனிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து வளர்ந்து வரும் இளம் பாடகர்களான சரண்யா சீனிவாஸ் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் இடம் பெறுகின்றனர். இந்த இசை நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கோர்டியார்டில் நடைபெறுகிறது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான உங்களது அனுமதி சீட்டுக்களை www.grabmyticket.com என இணையதளத்தில் பெறலாம். 

No comments:

Post a Comment