Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Monday, 5 October 2020

குலசாமி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்

குலசாமி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!


விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் 'விமல்'..!


விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து',  இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில்  உருவாகியுள்ள 'சண்டக்காரி',  தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. 






இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில்  நிறுத்தப்பட்டிருந்த "படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்" படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் 'குலசாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர்  சுராஜ் உதவியாளர்  R. துரை இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி'  என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.

'குலசாமி' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'குலசாமி' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

 

No comments:

Post a Comment