Featured post

Aaryan Movie Review

  Aaryan Movie Review Aaryan Movie Rating: 4.5/5  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வ...

Saturday, 24 October 2020

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப்

 அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று ட்ரெய்லர் வரும் அக்டோபர் 26 அன்று வெளியாகிறது, என்ஓசி சான்றிதழ் வழங்கிய இந்திய விமானப் படைக்கு சூர்யா நன்றி


அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது, ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது.


இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார்.



சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் அக். 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகிறது. அதற்கான ப்ரீமியர் லிங்க் amzn.to/ReminderSPTrai… 

#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @Aparnabala2

@nikethbommi @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth” 


இவ்வாறு பகிர்ந்திருந்தார்.


https://twitter.com/suriya_offl/status/1319998233041514496?s=21



தனது மற்றொரு ட்வீட்டில், சூர்யா கூறியிருப்பதாவது: 


“எங்கள் நலம் விரும்பிகள், நண்பர்கள், டெல்லியில் இருக்கும் FFO உள்ளிட்ட ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி, @IAF_MCC 

#SooraraiPottruOnPrime

@PrimeVideoIN @nfdcindia 

ffo.gov.in


#SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD @rajsekarpandian @sikhyaent @guneetm” 


இவ்வாறு சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


புதிய தமிழ் ஆக்‌ஷன்/டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். பிரதான கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்க, குனீத் மோங்காவின் சிக்யா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனரான கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “சிம்ப்ளி ஃப்ளை” என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமாகும்.


ஒப்புதம் பெறுவதற்கு முன்பாக, படத்தின் வெளியீடு தாமதமானது குறித்து சூர்யா தனது ரசிகர்களுக்கு மனம் திறந்த மடல் ஒன்றை பகிர்ந்திருந்தார். படத்தில் உள்ள ஒரு பாடலின் வடிவில் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.


படத்தின் தயாரிப்பாளர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் என்ஓசி சான்று பெறுவது குறித்து ட்வீட் செய்திருந்தார், அத்துடன் அவர் தீபாவளி வெளியீடு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment