Featured post

Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy

 Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy investigative thriller produced in Tamil and Telugu by AR ...

Tuesday 13 October 2020

தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை

 தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய கட்டில் படக்குழு


மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின்  படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது. 



திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார்.


சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம், தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழேந்தி இன்று கட்டில் படக்குழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். இவர் இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனான இ.வி.கணேஷ்பாபு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பாட, உடன் இப்படத்தில் நடித்திருக்கும் இ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டிடாங்கே, எடிட்டர் B.லெனின், கீதா கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


‘இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களையும் தமிழ் பாரம்பரியத்தையும் ‘கட்டில்’ திரைப்படம் வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி தன் மகன் பிறந்த நாளையும் தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி கட்டில் படக்குழுவோடு கொண்டாடியது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும். அதுவும் இன்று கட்டில் படப்பிடிப்பின் நிறைவு நாளில் அனைத்து முக்கிய கட்டில் படக்குழுவினரும் கலந்துக்கொண்டது தனி சிறப்பு’ என்று இப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.


வைட்ஆங்கிள் ரவிசங்கரன் கட்டில் படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார். "மெட்டிஒலி" சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment