Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Tuesday 20 October 2020

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா

 கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா - இயக்குநராகும்
K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்
....

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா. 







 


தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக்  கொண்டால், அதில் 'அவள் அப்படித்தான்', 'கடலோர கவிதைகள்' உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான K.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர். 


'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோர கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி', மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை,வசனம்  எழுதியவர் K.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'நியாய தராசு', 'அமரன்', 'துரைமுகம்', 'அதே மனிதன்', 'இந்திர விழா' மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார். 


பாபி சிம்ஹா - விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் K.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்  இதன் மூலமே படத்தின் வெற்றி உறுதியாகிறது. தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.


படக்குழுவினர் விவரம்:
கதை, திரைக்கதை, வசனம் - K.ராஜேஷ்வர்
இயக்குநர் - விக்ரம் ராஜேஷ்வர்
பி.ஆர்.ஓ  - யுவராஜ்

No comments:

Post a Comment