Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Wednesday, 28 October 2020

மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய இருவரின் ஒருங்கிணைந்த

மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய இருவரின் ஒருங்கிணைந்த மேதமையின் தலைமையினால் உருவாகும் நவரசா தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவிக்கிறது.

நவரசங்களிலும் (உணர்ச்சிகள்) ஊடாடிச் செல்லக்கூடிய, ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும், வேறெங்கும் காண முடியாத கதைகளை நெட்ஃபிலிக்ஸ் 190 நாடுகளில் அறிமுகம் செய்கிறது.

 

நன்மதிப்புப் படைப்புகள் [1]

படங்கள் (மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன், [2] ஸ்ரீஷ்டி ஆர்யா)

 

புதன்கிழமை, அக்டோபர் 28, 2020: நெட்ஃபிலிக்ஸ் தனது அடுத்த தமிழ்த் தொகுப்பான நவரசாவை இன்று அறிவித்தது. மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும் இது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள்.

 

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களை நவரசா ஒன்றிணைக்கிறது. இந்த அற்புதமான தொகுப்பில், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஒன்பது இயக்குநர்கள் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தங்களின் தனித்துவமான பார்வையைக் கொண்டு வருவதில் நம்புதற்கரிய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஒன்பது குறும்படங்களில் 40க்கும் மேற்பட்ட நடிகர்களும், பல நூறு படைப்பு வல்லுநர்களும், திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கு கொண்டுள்ளனர். போற்றத்தகுந்த படைப்பாற்றல் மிக்க தமிழ் சினிமா சமூகம், தனது ஒற்றுமை, மீட்சி ஆகியவை பற்றிய வலுவான செய்தியை வெளிப்படுத்துவதற்காக இதில் ஒன்றுபட்டு நிற்கிறது. பொது நன்மைக்காக தனது சேவையை கருணையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படங்களின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தை, பெருந்தொற்று நோய்ப் பரவலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக அவர்கள் பங்களிப்பார்கள்.


இந்த ஒத்துழைப்பு குறித்து பேசிய மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன், “அவசியமான காரணங்களுக்காகப் பணம் திரட்டுவதற்கு, தனித்துவமான யோசனைகளைக் வெளிக்கொண்டு வருவதற்காக, குழுவாக ஒன்றுபட்டு சிந்திக்கும் யோசனையை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். எங்களின் துறை சார்ந்த நலனுக்காகவும், பல மாதங்களாக வேலை இல்லாத எங்களது தொழிலாளர்களின் வேதனையைத் தணிப்பதற்காகவும் இந்த நேரத்தில் நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தோம். குறும்படங்களைத் தயாரித்து, அவற்றின் மூலம் நிதி திரட்டுவது என்ற எண்ணம் அத்தகையதொரு தருணத்தில், ஒரு மாலை நேரத்தில் உதித்தது. நாங்கள் அணுகிய அனைத்து முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமும் இந்த யோசனை உடனடியாக எதிரொலித்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, ஒன்பாண் சுவைத் தொகுப்பு என்ற யோசனை ஒரு தீப்பொறியாக உருவாயிற்று. ஒன்பது உணர்ச்சிகளை உணர்ச்சிகரமான ஒன்பது படங்களாக மாற்றுவதற்கும், பார்வையாளர்கள், நல்நோக்கம், திரைப்படத்தொழில், பொதுமக்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி எண்ணுவதற்குமாக இந்தத் தொழில்துறையினர் ஒன்று சேர்ந்துள்ளனர். படைப்பாற்றல், நல்நோக்கம், வெகுமக்கள்  ஆகியவற்றின் இந்த சங்கமத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல நெட்ஃபிலிக்ஸ் முன்வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”





‘நெட்ஃபிலிக்ஸ் இந்தியா’வின் அசலான  சர்வதேச திரைப்பட இயக்குநர் ஸ்ரிஷ்டி ஆர்யா கூறுகையில், “அசாதாரணமான இந்த ஒன்பது படங்களை உருவாக்கிய தாய் வீடாக நாங்கள் திகழ்கிறோம் என்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.. திரைப்படப் படைப்பாளிகள்,  திறமையாளர்களின்  அற்புதமான இந்த இணைவு, படைப்புச் சமூகத்தை ஆதரிக்க சிறப்பாகக் கரம் கோர்த்துள்ளது என்பதை நாங்கள் பாராட்டுகிறோம். நவரசம் என்பது திரைப்படத் தயாரிப்பின் கைத்திறம், தமிழ் சினிமாவின் மாயம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும், உலகிற்கு இதனை எடுத்துச் செல்வதற்கு நாங்கள் காத்திருக்க முடியாது. 

”நெட்ஃபிலிக்ஸ் பற்றி 

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி படக்காட்சித் தாரையான  பொழுதுபோக்குச் சேவையாகும், இது, 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 195 மில்லியனுக்கும் அதிகமான சந்தா செலுத்திய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை பல்வேறு வகைகளிலும், பல்வேறு மொழிகளிலும் நெட்ஃபிலிக்சின் துணையுடன் இவர்கள் அனுபவித்து வருகின்றனர். இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்தத் திரையிலும் எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், விரும்பும் அளவுக்கு படக்காட்சிகளை உறுப்பினர்கள் பார்க்கலாம். விளம்பரங்கள் இல்லாமல், எந்தவிதமான நிர்பந்தமும் இல்லாமல் உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளைக் காணலாம். இடையில் நிறுத்திவிட்டு, பிறகு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து  மீண்டும் பார்க்கலாம். 

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia ஆகிய இணைய முகவரிகளில் எங்களைப் பின்தொடருங்கள். 


ஜஸ்டிக்கெட்கள் பற்றி: 

கோவிட்-19 நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டும் ஒரு முயற்சியாக குறும்படங்களின் நவரசத் தொகுப்பு பற்றிய சிந்தனையை இயக்குநர்கள் மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சபகேசன் (இணை நிறுவனர், கியூப் சினிமா) ஆகியோர் உருவாக்கினர். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸுடன் இணைந்து ஜஸ்டிக்கெட்ஸ் பதாகையின் கீழ் இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் திறமையாளர்களும், நிறுவனங்களும் திரைத்துறையை பெருமளவில் ஆதரிக்கும் ஒரே நோக்கத்திற்காக,. பொது நன்மையைக் 

No comments:

Post a Comment