Tuesday, 27 October 2020

இந்த வார ‘சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு’ நிகழ்ச்சியில் தனிப்பட்ட வளர்ச்சி மீது கலந்துரையாடும் தென்னிந்திய

 

இந்த வார  ‘சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில்  தனிப்பட்ட வளர்ச்சி மீது கலந்துரையாடும் தென்னிந்திய திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

~சிந்தனைகளை தூண்டும் இந்த உரையாடல் நிகழ்வைக்காண அக்டோபர் 25, ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள் ~

 பல்வேறு சமூக பிரச்சனைகளை அலசுகின்ற அதே நேரத்தில் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் கவனம் செலுத்துகின்ற இந்த வார சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியானது, பிரபல மாடல், நடிகர் மற்றும் இளையோரின் மனம் கவர்ந்த கணேஷ் வெங்கட்ராமன் உடன் ஆன்மீக குருவும், உலகளவில் பிரபல மனிதாபியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் மகிழ்ச்சியூட்டும் உரையாடலில் ஈடுபடுவதை ஒளிபரப்புகிறது.  

 அக்டோபர் 25, ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பப்படவுள்ள இந்நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடை நீங்கள் தவறாமல் காணவேண்டும் என்பதற்கான மூன்று காரணங்கள் இதோ:

  வாழ்க்கையில் உங்கள் பெருவிருப்பம் மற்றும் பேரார்வத்தை கண்டறிதல்: வாழ்க்கையில் ஒருவரது ஆழமான விருப்பமும், பேரார்வமும் என்ன என்று கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி கணேஷ் வெங்கட்ராமனும், குருதேவ் அவர்களும் ஆழமாக விவாதிக்கின்றனர்ஒருவரது பேரார்வம் என்னவென்று அடையாளம் காண்பது, அதிக நிறைவும், திருப்தியும் உள்ள வாழ்க்கையை ஒருவர் வாழ்வதற்கு எப்படி வழிவகுக்கும் என்பது பற்றி அவர்கள் பேசுகின்றனர்.

  உறவுகளில் சமநிலை: உறவுகளில் சமநிலையைக் கொண்டிருக்கும் கலை மற்றும் சமூக, ஊடக செயல்தளங்களில் அவைகள் சித்தரிக்கப்படுவது பற்றி கணேஷ் மற்றும் குருதேவ் அவர்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல் சுவாரஸ்யமானதுஅவரது இந்த உலகம் சார்ந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில முன்னுதாரணங்களை குருதேவ் பகிர்ந்துகொள்கிறார் மற்றும் பல நபர்களை ஒருவர் அறிந்திருப்பது என்பதற்கு, அவருக்குப் பல தோழர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமல்ல என்பதை உறுதிப்பட வெளிப்படுத்துகிறார்எந்தவொரு உறவையும் நீடிக்கப்பட்ட ஒரு காலஅளவிற்கு கவனத்தோடு பேணி வளர்ப்பது அதை பயனுள்ளதாகவும், முக்கியமானதாகவும் ஆக்குவதற்கு இன்றியமையாதது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நம்புகிறார்

 சமூக ஊடக யுகத்தில் வாழ்க்கை: பொய்யான, போலியான செய்திகளையும், எதிர்மறை உணர்வையும் மக்கள் மத்தியில் பரப்புவதற்குப் பதிலாக, நம்பிக்கையையும், நேர்மறை உணர்வையும் தூண்டிவிடுகின்ற ஒரு கருவியாக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி கணேஷ் வெங்கட்ராமன் குருதேவிடம் கேள்விகளை தொடுக்கும்போது உரையாடல் இன்னும் ஆழமானதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் ஆகிறதுஅநேக நேரங்களில் சமூக ஊடகங்கள் எதிர்மறையானவை என்று குருதேவ் ஒப்புக்கொள்கின்ற நிலையில், அதனை பொறுப்பாக பயன்படுத்தினால் சமூகத்திற்கு அதிக நன்மை பயப்பாக அது இருக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்

 அக்டோபர் 25, ஞாயிறு காலை 11.00 மணிக்கு, குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன், பிரபல நடிகரும், மாடலுமான கணேஷ் வெங்கட்ராமன் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வருகின்ற சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடை காணத் தவறாதீர்கள்.

  கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).

  கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாசிசி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

  வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.

 

No comments:

Post a comment