Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 15 April 2021

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் “விக்ராந்த் ரோணா”

 நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில்  “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 2021 ஆகஸ்ட் 19 வெளியாகிறது ! 






ஆகஸ்ட் 19 ரசிகர்கள் ஒரு புதிய நாயகனை காண போகிறார்கள். பிரபல கன்னட நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்களின் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் வரும் 2021 ஆகஸ்ட் 19 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  

நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து  25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பன்மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும்  “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 190 நொடிகள் கொண்ட   ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரமாண்டமாக வெளியிடபட்டது.



கன்னட சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழும் பாட்ஷா கிச்சா சுதீப், பொதுமுடக்கத்திற்கு பிறகு திரையரங்கில் திரைப்படத்தை காணும் அனுபவத்தை ஊக்குவிக்கும் விதமாக எதிர்பார்பு மிக்க தனது திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது, ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்மொழிகளில் ஆக்சன் அட்வெஞ்சர் படமாக தயாராகியுள்ள இப்படம், உலகம் முழுதும் 14 மொழிகள் 55 நாடுகளில் வெளியாகிறது. 2021 வருடத்தின் தவிர்க்கவியலாத படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.


தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது...

ஒரு தயாரிப்பாளராக விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. இப்படம் மூலம் உலகிற்கு, ஒரு புதிய நாயகனாக விக்ராந்த் ரோணாவை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.  விஷிவலாக திரையில் பலவிதமான மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய பிரமாண்ட படைப்பு இது. பொது முடக்க காலத்தால் திரைப்படங்கள் வெளிவராத நிலையில் இப்பிரமாண்ட படைப்பை ரசிகர்கள் திரையரங்கில் காணவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். பாட்ஷா கிச்சா சுதீப் போன்ற நட்சத்திர நடிகரின் நடிப்பில், ரசிகர்களை மிகப்பெரும் கொண்டாட்டத்திற்கு கண்டிப்பாக கொண்டுசெல்வோம் என உறுதியாக நம்புகிறோம். 



இயக்குநர் அனூப் பந்தாரி கூறியதாவது... 

திரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மிக அற்புதமான தொழில்நுட்ப குழுவினரின் உதவியில் விக்ராந்த் ரோணா வாழ்வின் தருணங்களை பிரமாண்டமான வழியில் ரசிகர்களுக்கு விருந்தாக்குவோம். 


"விக்ராந்த் ரோணா"  படக்குழுவினர் இப்படம் 3D தொழில்நுடபத்திலும் வெளியாகும் என்பதை உறுதிசெய்துள்ளனர். அது பற்றிய விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.


இப்படத்தை அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே ஜி எஃப் படப்புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சிவகுமார் J செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீதா அசோக்  நடித்திருக்கும் “விக்ராந்த் ரோணா”  திரைப்படம் 2021 ஆகஸ்ட் 19 உலகம் முழுதும் திரையரங்குகளில்  வெளியாகிறது

No comments:

Post a Comment