Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Tuesday, 27 April 2021

ஜீவன் நடிக்க v.c.வடிவுடையான் இயக்கும்

 ஜீவன் நடிக்க v.c.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம்" படத்தில் மல்லிகா ஷெராவத்தின் லுக்கு வெளியானது


ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில்  தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் , கன்னடம், என ஐந்து மொழிகளில் 30 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார் வி.பழனிவேல்

“பாம்பாட்டம்“திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்




நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடித்துவருகிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். இவரின் 

லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டனர் இது ரசிகர்களின் மத்தியில் பெரும்வரவேற்ப்பை பெற்றுள்ளது

இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் குதிரையில் வருவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

படத்தில் சுமன், சரவணன், ரமேஷ்கண்ணா,வெங்கட் என

ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.


 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுபின்னணிகொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் கையாளப்படும் கதை,  அதனால் பெரும்பொருட்செலவில் செட்டுகள் அமைத்து cg க்குமிகமுக்கியம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபேற்றுவருகிறது 


ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்


இசை – அம்ரிஷ்


பாடல்கள்  - பா.விஜய், யுகபாரதி, விவேகா


எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்


கலை  - A.பழனிவேல்


ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்


நடனம் – தினேஷ், சிவசங்கர்


மக்கள் தொடர்பு – மணவை புவன்


இணை தயாரிப்பு  - பண்ணை A இளங்கோவன்


தயாரிப்பு  - V.பழனிவேல்

No comments:

Post a Comment