லம்பக் கலையில் சிறந்து விளங்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்
முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர் செல்வன் ரோஹித். வி,அண்மையில் சென்னை ஃபாரெக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழகத்தின் பரம்பரிய வீர
விளையாட்டுப் போட்டி -2021 இல் கலந்து கொண்டு சிலம்பட்டத்திற்கான "மகாகுரு
ஜம்பு ஆசான்" நினைவுப் பரிசை வென்றார்.
இப்போட்டியினை சென்னை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இது தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலையின் வளமான பாரம்பரியத்தை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக அமைந்திருந்தது.
தமிழ்ப் பாரம்பரியத்தின் நுட்பத்தை வெளிப்படுத்தும் சிலம்பாட்டத்தில்
மாணவரின் மகத்தான இச்சாதனையைப் சாதனையைப் பள்ளி நிர்வாகம் வியந்து பாராட்டியுள்ளது.
No comments:
Post a Comment