திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, நடிகர் சத்யதேவ் !
தெலுங்கு திரையுலகில், திறமை மிகுந்த இளம் நடிகராக கொண்டாடப்படும், நடிகர் சத்யதேவ் தன் திரைவாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்திய அளவில் பிரபல நட்சத்திரமான நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து “Mr. Perfect” திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சத்யதேவ், தொடர்ந்து மிகச்சிறந்த கதாப்பாத்திரங்களில், வெற்றிபடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், பல வருடங்களாக நீடித்திருக்கும் நண்பர்களில் ஒருவரான #பிரபாஸ் அண்ணா அவர்களுடன் இணைந்து அறிமுகமான, எனது முதல் படம் #mrperfect வெளியாகி 10 வருடங்கள் கடந்திருக்கிறது. அது பற்றி இதோ ஒரு சிறு வீடியோ துணுக்கு. இப்பயணத்தில் பெரும் அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து, தந்திருக்கும் ரசிகர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நடிகர் சத்யதேவ் கூறியதாவது...
மிகப்பெரும் நம்பிக்கைகளுடன் கனவுகளுடன், திரை மீதான காதலுடன் எனது திரைப்பயணத்தை துவங்கினேன். இப்போது 10 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. எனது கனவுகள் பலவும் நனவாக்கியுள்ளது இந்த திரைத்துறை. மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். இன்னும் நிறைய கனவுகளையும் நம்பிக்கையையும் இத்திரைத்துறை தந்துள்ளது.
வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்களுக்கும் நன்றி. இவர்கள் தான் என் திரைவாழ்வின் வெற்றிக்கு பெரும் காரணமானவர்கள். மேலும் எதிர்பார்ப்பில்லாமல் அளவில்லாத அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மேலும் பல நல்ல திரைப்படங்கள் மூலம் அவர்களை மகிழ்விப்பேன்.
No comments:
Post a Comment