Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Tuesday, 27 April 2021

பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான்

 பிரபல நட்சத்திரம் துல்கர் சல்மான் SkyMan Films International  “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டார் ! 




SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் முதல் படமாக, பிக்பாஸ் முகேன் மற்றும் மீனாக்‌ஷி   நடிக்கும் “வேலன்” படம் துவக்கம் முதலே எதிர்பார்ப்பிற்குரிய படமாக உருவாகி வந்துள்ளது. படபிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரடக்சன் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், படத்திற்கு கிடைத்த மற்றொரு மகுடமாக, இந்திய அளவில் பிரபலாமான நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். 




SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது.. 


துல்கர் சல்மான் போன்ற ஒரு மிகப்பெரும் நட்சத்திரம் எங்களின் “வேலன்” படத்தினுடைய  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது, எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இது படத்தின் மீது மிகப்பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக எங்களின் படக்குழு சார்பில் துல்கர் சல்மான அவர்களுக்கு பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் படத்தின் இசை, ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 





வேலன் படத்தினை SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கவின் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி

நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா A பிள்ளை மற்றும் K.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் வசனமெழுதியுள்ளனர். “கலைமாமனி”  சிற்றரசு புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment