Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Wednesday, 28 April 2021

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும்

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் 'கும்பாரி'..!


ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த  30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.



படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது ...

இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு,  முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக  ஒரே கட்டமாக  நடைபெற்று முடித்துள்ளோம்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
 
ஜெய் படத்தொகுப்பு செய்ய,ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.










No comments:

Post a Comment