வேலம்மாள் பள்ளி மாணவி சவிதா "சர்வதேச பெண்கள் மாஸ்டர் பட்டம்" வென்றார் .
சமீபத்தில் செர்பியாவில் நடைபெற்ற பெல்கிரேட் ஸ்பிரிங் சதுரங்கத் திருவிழா - 2021 இல் பங்கேற்ற மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி பி.சவிதா ஸ்ரீ
,சதுரங்க விளையாட்டின் 3 வது விதிமுறையை வெற்றி கரமாக நிறைவேற்றியதன்
மூலம் சர்வதேச பெண்கள் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
13 வயதே நிரம்பிய சவிதா சர்வதேச பெண்கள் மாஸ்டர் என்றழைக்கப்படும் சதுரங்க விளையாட்டின்
இரண்டாவது மிகவும் கடினமான தலைப்பினை வென்றுள்ளமை மிக அரிய சாதனையாகவே
பார்க்கப்படுகிறது.
சர்வதேச சதுரங்க விளையாட்டின் மூன்று தலைப்பு விதிமுறைகளையும்
பூர்த்திசெய்து, 2200 புள்ளிகளில் தேவையான FIDE மதிப்பீட்டை வீழ்த்தி சவிதா
தனது எதிராளியான ஜோகிக் நேனாட்டை 9 இல் 5.5 மதிப்பெண்களுடன்
தோற்கடித்தார்.
பள்ளி நிர்வாகம் அவரது அற்புதமான சாதனைக்காக அவரை வாழ்த்துகிறது மற்றும்
அடுத்தடுத்த ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான சதுரங்க வாழ்க்கைப் பாதையில்
அவர் பயணிக்க விரும்புகிறது
No comments:
Post a Comment