வேலம்மாள் பள்ளி மாணவர் குத்துச்சண்டை போட்டியில்
தங்கம் வென்று சாதனை
2021 ஏப்ரல் 16 முதல் 2021 ஏப்ரல் 18 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஃப்.எஸ்.ஏ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் , 2021 ஏப்ரல் 16 முதல் 2021 ஏப்ரல் 18 வரை
நடைபெற்ற டம்பல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2020-2021 போட்டியில் ,
முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் மையப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவன் செல்வன் ஜி .அஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
காஞ்சீபுரத்தில் இருந்து விளையாடிய தனது எதிர்ப் போட்டியாளரை (64-67 கிலோ எடை) சப்-ஜூனியர் பிரிவில் வீழ்த்தி பட்டம் பெற்றார்
மாணவர் ஜி .அஸ்வின். இந்த சாம்பியன்ஷிப் கோப்பை டம்பல் மற்றும் எஃப்.எஸ்.ஏ ஸ்போர்ட்ஸ் அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் சுமார் 150 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். அவரது குறிப்பிடத்தக்க சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது.
No comments:
Post a Comment