Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Friday, 16 April 2021

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு” !

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு” !

பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.



நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷியம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.


“அன்பறிவு”  கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. திறமையான,  புத்தம் புது நாயகி ஷிவானி ராஜசேகர் பங்குபெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.


சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக அன்பறிவு உருவாகியிருக்கிறது.


இப்படத்தல்  ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளது.


படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 8 லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது.


பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டை சிறப்பாக செய்திட திட்டமிட்டு வருகிறது.


இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

No comments:

Post a Comment